சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் வடக்கு சீனாவில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. பெய்ஜிங் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஆறுகளிலும், சாலைகளிலும் வெள்ளம் பெறுக்கெடுத்து செல்கிறது. வெள்ளநீரில் கார்கள் அடித்து செல்லபடும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. குடியிருப்புகள் அனைத்தும் வெள்ளநீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது.











