சென்னை: எனது உடல்நலனை விட மாநில மக்களின் நலனே முக்கியம் என சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காய்ச்சல், தொண்டை வலி காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்தாலும், மக்கள் நலன் கருதி பேரவை வந்துள்ளேன். கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் செயல்கள் நடக்கின்றன. மத்திய அரசின் இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தலையாய மாநிலம் தமிழ்நாடு என முதல்வர் தெரிவித்தார். 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிகிறார்.