சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சுகாதார சான்றிதழ் வழங்கும் நடைமுறையை எளிமையாக்கி உள்ளது. ‘எளிமை ஆளுமை’ திட்டத்தின் கீழ் சுகாதார சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறை தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் சுகாதார சான்றிதழ் வழங்கும் தற்போதைய நடைமுறை மாற்றப்பட்டு, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் அரசாணையில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி இ-சேவை இணையதளம் (https://www.tnesevai.tn.gov.in/) வாயிலாக சுய சான்றளிப்பின் அடிப்படையில் சுகாதார சான்று பெறலாம். மேற்காணும் சான்றில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சான்றிதழ் வழங்கும் நடைமுறை எளிமையாக்கம்
0