Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பியூமிஸ் கல்லின் பயன்கள்

நன்றி குங்குமம் டாக்டர்

முக அழகிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பெரும்பாலும் பாதங்களுக்கு பலரும் கொடுப்பது கிடையாது. இதனால் பலருக்கும் பாதங்களில் வெடிப்புகள் உண்டாகிறது. இது அழகைக் கெடுப்பதோடு ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அதுபோன்று பொருந்தாத காலணிகள், உப்புத் தண்ணீரில் நின்று வேலை செய்வது, சத்துக்குறைவு போன்றவையும் பாதத்தில் வெடிப்புகள் ஏற்பட காரணமாகும். இத்தகைய வெடிப்புகள், இறந்த செல்கள் படிதல் போன்ற பிரச்னைகளை நீக்கி பாதங்களை மென்மையாக வைக்க உதவுகிறது பியூமிஸ் கல். இதை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்:

பியூமிஸ் கல் பாதங்களில் படிந்துள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. உலர்ந்த நிலையில் உள்ள பியூமிஸ் கல்லை நேரடியாக சருமத்தின் மீது பயன்படுத்தினால் பாதங்களில் சிராய்ப்பு மற்றும் காயங்கள் ஏற்படக் கூடும். எனவே, பாதங்களின் மீது தேய்ப்பதற்கு முன்பு, வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்க வேண்டும். பியூமிஸ் கல்லைப் மென்மையாக வட்ட வடிவில் சுழற்றி தேய்க்கவும். இதனால் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும்.

ஒவ்வொரு முறை பியூமிஸ் கல்லைப் பயன்படுத்திய பிறகும், அதில் ஒட்டியிருக்கும் அழுக்குகளைச் சுத்தம் செய்ய வேண்டும். ஒருவர் பயன்படுத்திய கல்லை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. ஒரே கல்லை, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.பாதங்களில் காயங்கள், புண் ஏதேனும் இருந்தால் பியூமிஸ் கல்லை பயன்படுத்தக்கூடாது.

பியூமிஸ் கல்லைப் பயன்படுத்திய பிறகு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி பாதங்களை மசாஜ் செய்வது நல்லது. மாய்ஸ்சுரைசருக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய்யும் தடவி மசாஜ் செய்து வெது வெதுப்பான நீரில் கழுவலாம்.இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு பாதங்களில் நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவி வட்ட வடிவில் மென்மையாக மசாஜ் செய்து விடவும். பிறகு, சுத்தமான துண்டைப் பயன்படுத்தித் துடைத்து, உலரவிட்டு காலுக்கு சாக்ஸ் அணிந்து கொள்ளலாம். இவ்வாறு வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால், கால்கள் கருமையாவதையும், குதிகால் வெடிப்பு ஏற்படுவதையும் தடுக்கலாம்.

தொகுப்பு:  ரிஷி