Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாழைத்தண்டின் அற்புதங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

வாழைத்தண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை நிறைந்துள்ளன.

வாழைத்தண்டின் முக்கிய நன்மைகள்

சிறுநீரகக் கோளாறுகள்: சிறுநீரகக் கற்களைக் கரைக்கவும், சிறுநீர் எரிச்சலைப் போக்கவும் வாழைத்தண்டு சாறு உதவுகிறது. வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச்சுருக்கு தீர அருந்தி வரலாம். சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்த வாழைத்தண்டு உதவியாக இருக்கும். எனவே, குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு சாறு அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

எடை குறைப்பு: வாழைத்தண்டில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவும்.

நெஞ்செரிச்சல் தீர: நெஞ்செரிச்சல் அதிகமாய் இருந்தால் உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடிப்பது நல்லது.

ரத்த அழுத்தம்: இதில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

சர்க்கரை நோய்: ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுத்து, சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில், வைக்க தினமும் வாழைத்தண்டு சாறு அருந்தலாம்.

செரிமானம்: இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும்.

பயன்படுத்தும் முறைகள்

வாழைத்தண்டை பச்சையாக சாலட் வடிவிலோ, ஜூஸாகவோ அல்லது பொரியல், கூட்டு செய்தோ சாப்பிட்டு வந்தால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறிவிடும்.

வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும்.

வாழைத்தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவடையும்.

மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக

பயன்படுகிறது.

தொகுப்பு: - தவநிதி