Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க 5 எளிய வழிகள்!

நன்றி குங்குமம் தோழி

1)சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டுள்ள செயற்கைக் குளிர்பானங்கள், சோடா, எனர்ஜி பானம் போன்றவற்றைக் குடிப்பதற்கு பதிலாக தண்ணீர், மூலிகை டீ, மோர் போன்றவற்றை அருந்துவது சர்க்கரையை குறைத்து ஆரோக்கியம் தரும்.

2)ஒவ்வொரு சீஸனில் ஃப்ரெஷ்ஷாகக் கிடைக்கும் பழங்களில் இயற்கையான இனிப்புச் சத்தும், நார்ச்சத்தும் அடங்கியுள்ளன. இவற்றைச் சாப்பிட்டால், ரத்தச் சர்க்கரை அளவு சமநிலையில் இருக்கும். பழச்சாறு என லேபிள் ஒட்டியிருக்கும் பேக் செய்யப்பட்ட ஜூஸ்களில் நார்ச்சத்தும் கிடையாது, அவற்றில் ரசாயனங்களும் சேர்த்திருப்பார்கள்.

3) பாக்கெட் உணவுகளின் மேலே அச்சிட்டிருக்கும் சத்துகள் விகிதத்தைக் கவனமாக படிக்கவும். அதில் சர்க்கரையின் அளவு, க்ளுக்கோஸ், சுக்ரோஸ் எனப் பலவித மாற்றுப் பெயர்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். நோ சுகர், குறைந்த அளவு சுகர் எனப் போட்டிருக்கும் பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.

4) குக்கீஸ், சாக்லேட், இனிப்புகள் போன்ற சர்க்கரை அதிகம் சேர்த்த ஸ்நாக்ஸ்களை தவிர்த்து சத்தான நட்ஸ், விதைகள், சுண்டல், அவல் போன்றவற்றைச் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

5)வெளி உணவுகளை குறைத்து, வீட்டில் உப்பு மற்றும் சர்க்கரையை அளவாக போட்டுச் சமைக்கும் நம் பாரம்பரிய உணவுகளை சாப்பிடும்போது சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

- எஸ்.இராமதாஸ், புதுச்சேரி.