Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

எளிய மருத்துவம்

நன்றி குங்குமம் டாக்டர்

*தேங்காய் எண்ணெயில் வசம்புதூள், வெள்ளை மிளகுத்தூள் கலந்து சிறிது சூடு செய்து தலையில் புழுவெட்டு உள்ள இடத்தில் சிறிது அழுத்தி தேய்த்து வர வழுக்கை மறைந்து முடி வளரத் தொடங்கும்.

*கொழுந்து வெற்றிலை சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்து நகச்சுற்று உள்ள இடத்தில் கட்டினால் விரைவில் குணம் கிடைக்கும்.

*பச்சைப்பயறு, கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு சேர்த்து அரைத்து சோப்புக்கு பதில் குளித்து வர, சரும அலர்ஜி வராது, வியர்வை நாற்றமின்றி உடல் மணமாக இருக்கும்.

*நன்றாக முற்றிய பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கி, புளிப்பு மோரில் உப்பு போட்டு ஊறவைத்து உலர்த்தி வற்றலாக செய்து சாப்பிட, பசியின்மை போகும். வயிற்று உப்புசம், பொருமல் சரியாகும்.

*மாதுளை சாறில் தேன் கலந்து 48 நாட்கள் குடித்து வர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.

*முட்டைகோஸ், வாழைத்தண்டு, சுரைக்காயை சூப் செய்து அடிக்கடி சாப்பிட உடலில் உள்ள கெட்ட கழிவுகள் நீங்குவதுடன் உடல் எடையும் குறையும்.

* நகம் உடைந்து, சொத்தையாகி இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து பற்று போட்டு வந்தால் விரைவில் சொத்தை மறைந்து, புது நகம் வளரும்.

*வில்வமரப் பூ மற்றும் எலுமிச்சை சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டு வர, குடல் வலிமை பெறும்.

* மூட்டுவலி, கால்வலி எளிதில் குணமாக நொச்சி இலை, வேம்பு, முடக்கத்தான், வாத நாராயணன், புளிய இலை ஆகியவற்றை ஒரு கைப்பிடி எடுத்து பானை தண்ணீரில் போட்டு 1 மணி நேரம் ஊறிய பின்னர் கொதிக்க வைத்து, இளஞ்சூட்டில் வலி உள்ள இடத்தில் ஊற்றி மசாஜ் செய்ய, நல்ல பலன் கிடைக்கும்.

*முருங்கைக்கீரை காம்புடன் 5 கொத்து, 1 துண்டு இஞ்சி இரண்டையும் லேசாக தட்டி 2 டம்ளர் தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து, பாதியாக வந்ததும் இறக்கி பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க, வயிற்றுப்புண், பித்தம், மலச்சிக்கல் குணமாகும். உடல் உஷ்ணம் தணியும்.

*வாய்ப்புண் மற்றும் வாய் நாற்றம் மறைய ஆலமரப் பட்டையை இடித்து நீரிலிட்டு காய்ச்சி வைத்துக்கொண்டு வாய் கொப்பளித்து வரலாம்.

*ஆல மர இலை நாள்பட்ட புண்கள், கட்டிகளுக்கு சிறந்த மருந்தாகும். கட்டிகளின் மேல் ஆலமர இலையை அரைத்து பூசி வர கட்டிகள் உடைந்து புண் ஆறிவிடும்.

தொகுப்பு:- மகாலட்சுமி சுப்ரமணியன்