Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

எளிய வீட்டு வைத்தியம்!

நன்றி குங்குமம் டாக்டர்

*முருங்கை ஈர்க்குகளை மிளகு சேர்த்து ரசம் வைத்து அருந்த உடல் அசதி குணமாகும்.

*ஆவாரை இலையைச் சாறு எடுத்து முகத்தில் தடவி வர முகம் பளபளப்பதுடன் பொலிவாக மாறும்.

*வெந்தயத்தை நெய்விட்டு வறுத்து அத்துடன் சிறிது சோம்பு, உப்பு சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடிக்க வயிற்றுப்போக்கு குணமாகும்.

*மாதுளம் பழத்தின் சாற்றுடன் கற்கண்டு சேர்த்து அருந்த உடல் உஷ்ணம் குறைந்து, குடல் இயக்கத்தை மேம்படுத்தும்.

*இஞ்சிச் சாறுடன் பனைவெல்லம் சேர்த்து காய்ச்சி ஏலம், கிராம்பு, ஜாதிக்காய்தூள் சேர்த்துக் கிளறி இறக்கி, ஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர வாயுத் தொல்லைகள் அறவே நீங்கும்.

*அகத்திக்கீரையை எடுத்து அரிசி கழுவிய நீரில் போட்டு அவித்து அதனுடன் உப்பும், சீரகமும் பொடி செய்து கலந்து பருக ரத்தக் கொதிப்பு குணமாகும்.

*ஜாதிக்காய், சுக்கு தலா 20 கிராம் எடுத்துக் கொண்டு அதனுடன் சீரகம் 50 கிராம் கலந்து பொடித்து வைத்துக் கொண்டு தினசரி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து உணவுக்கு முன் உண்டு வர செரிக்கும் திறன் அதிகரித்து வயிற்றில் உள்ள வாயு அகலும்.

*பெருங்காயம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. உடலின் படபடப்பை போக்கி வாயுவை அகற்றி, வயிற்றுவலியை குணமாக்கும்.

*மூச்சுத்திணறல், சுவாச நோய்கள், வயிற்று உப்புசத்திற்கு நல்ல மருந்து. மயக்கம், சித்தபிரமை போக்கக் கூடியது. வயிற்றுப் பூச்சிகளை நீக்கி மலக்குடலை சுத்தம் செய்யும் திறன் கொண்டது பெருங்காயம்.

*துளசி இலை, தும்பை இலை, வெற்றிலை, மிளகு ஆகியவற்றை கஷாயம் செய்து காலையில் குடித்து வர மார்புச்சளி வெளியேறும். மூச்சுத் திணறல் குணமாகும்.

*மாதவிடாய் தொந்தரவுகளை குணப்படுத்தவும். உடல் உறுப்புகளை பலப்படுத்தவும் சாமை நல்ல பலன் கொடுக்கும். சாமை கிச்சடி, சாமை கஞ்சி என சாமையில் தயாரித்த உணவுகளை அந்த சமயங்களில் எடுத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: சுப்ரமணியன்