Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அழகே அழகு ஸ்ரேயா சரண்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

சமீபத்தில் இந்தியில் ரிலீஸான ‘த்ரிஷியம் 3’, தமிழில் ‘சண்டக்காரி’, விரைவில் ரிலீஸாக உள்ள தெலுங்குப்படம், அடுத்து நடிகர் மாதவனுடன் பெயரிடப்படாத இந்திப்படம்... என மீண்டும் பிஸியாகி உள்ளார் நடிகை ஸ்ரேயா சரண். திரைத்துறையில் அறிமுகமாகி பல ஆண்டுகள் கடந்தாலும், இன்றும் அதே இளமைத் தோற்றத்துடன் ரசிகர்களைக் கவர்ந்து வரும் இவர், நடிப்பு, நடனம், குடும்ப வாழ்க்கை என தனது வாழ்க்கையை சமநிலையுடன் நகர்த்தி வருகிறார்.

ஸ்ரேயா இயற்கையான அழகுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர். அவர் கடைபிடிக்கும் சில ஆரோக்கியமான பழக்கங்களே இந்த இளமைத் தோற்றத்துக்கு காரணமா? தெரிந்து கொள்வோம்.

வொர்க் அவுட்

திரைத்துறைக்கு வந்தவுடனே ஃபிட்னெஸ் எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்துகொண்டேன். அன்று முதல் இன்றுவரை உடற்பயற்சி என்பது எனது தினசரி பணிகளில் ஒன்றாகிவிட்டது. உடல் எடையைக் குறைப்பதற்காக மட்டுமல்ல உடற்பயிற்சி. மாறாக உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கான வழி. எனவேதான் நான் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த சமயங்களிலும் வொர்க்கவுட் செய்வதை மட்டும் நிறுத்தவில்லை.

அந்த வகையில், யோகா, ஸ்ட்ரென்த் டிரைனிங், ஸ்ட்ரெச்சிங், பைலேட்ஸ், நடைப்பயிற்சி, ஓட்டம் போன்ற உடல் இயக்கங்களை எனது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகவே வைத்திருக்கிறேன். அதேபோன்று, நடனமும் ஒரு உடற்பயிற்சிதான். தொடர்ந்து நடனப் பயிற்சி செய்வதன் மூலம் உடலின் நெகிழ்வுத்தன்மை, சமநிலை மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்தி என்றும் ஆக்டிவாக இருக்கிறேன்.

டயட்

உடல் ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் உணவுப் பழக்கம் மிகவும் முக்கியமானது. என்னைப் பொருத்தவரை அதிகப்படியான டயட் முறைகளைப் பின்பற்றுவதைக் காட்டிலும், சமச்சீர் உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் சரியானது. எனவே, வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட இயற்கையான உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்கிறேன்.

ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்வதும் எனது உணவுப் பழக்கங்களில் ஒன்று. பாதாமில் உள்ள வைட்டமின் E மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்கும் சருமத்துக்கும் மிகவும் தேவையானது.

பியூட்டி

அழகு எனும்போது சரும ஆரோக்கியமே முக்கியமானது. எனவே, எனது சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை கடைபிடித்து வருகிறேன். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது சருமம் வறண்டுபோவதைத் தடுக்க உதவும். இதைத்தவிர, கிளென்சர், மாய்ஸ்சரைசர், சன்ஸ்கிரீன், முகத்துக்கு புத்துணர்ச்சி தேவைப்படும்போது ரோஸ்வாட்டருடன் சிறிதளவு கிளிசரின் கலந்து பயன்படுத்துவேன். இது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்க உதவும்.

சமையலறையிலிருக்கும் சில பொருள்களையே பயன்படுத்துகிறேன். உதாரணமாக, கடலைமாவுடன் மஞ்சள் அல்லது தயிர் கலந்து முகத்துக்கு பயன்படுத்துவதுடன், வெள்ளரிக்காய், தக்காளி, வாழைப்பழம், உருளைக்கிழங்கு தோல் போன்ற சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களையே சருமப் பராமரிப்புக்கு உபயோகிக்கிறேன்.

இதுபோன்ற அடிப்படை ஆரோக்கியப் பழக்கங்களே அழகை நீண்ட காலம் பராமரிக்க உதவும்.பல ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்தாலும், எனது தோற்றத்திலும் எனர்ஜியிலும் எப்போதும் எந்த சமரசமும் செய்து கொண்டதில்லை. அதுவே, ரசிகர்கள் மத்தியில் இன்றுவரை எனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துள்ளதாக நம்புகிறேன். இதுவே எனது தோற்றப் பொலிவுக்கான ரகசியங்கள்.

தொகுப்பு: - ஸ்ரீ தேவி குமரேசன்