Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ராஜ்குமார் ராவ் ஃபிட்னெஸ் சீக்ரெட்!

நன்றி குங்குமம் டாக்டர்

தனது ஒவ்வொரு படத்துக்கும் அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு வெவ்வேறு வித்தியாசமான தோற்றத்தில் தன்னை மாற்றிக் கொண்டு ரசிகர்களை வியக்க வைப்பவர் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ். இவர் ‘டிராப்ட்‘ படத்திற்காக 22 நாட்களில் 7 கிலோ எடையை குறைத்தார். ‘பதாய் தோ‘ படத்திற்காக தசைநார் உடலமைப்பை (muscular physique) உருவாக்கினார். இப்படி வியக்கத்தக்க வகையில் தனது தோற்றத்தை அவ்வப்போது மாற்றிக்கொள்ளும் திறமை கொண்ட ராஜ்குமாரின் ஃபிட்னெஸ் ரகசியங்களைத் தெரிந்துகொள்வோம்.

வொர்க்கவுட்ஸ்

சினிமாவுக்குள் வரும் வரை நானும் சாதாரண மனிதர்களைப் போல அதிக எடையும், தொந்தியுடனும்தான் இருந்தேன். சினிமாவுக்குள் வந்தபிறகுதான், ஒரு மனிதனுக்கு ஃபிட்னெஸ் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தேன். அதன்பிறகு தினசரி உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கினேன். இப்போது எனது தோற்றத்தை நான் விரும்பும் நேரத்தில் விரும்பும் வகையில் வடிவமைத்துக் கொள்ளும் வித்தையை கற்றுக் கொண்டேன்.

அதற்காக, தினமும் தீவிர ஜிம் பயிற்சிகள் செய்து வருகிறேன். அந்தவகையில், புஷ்-அப்கள், டிப்ஸ், ஸ்குவாட்ஸ் மற்றும் அப்டாமினல் கிரஞ்சஸ் போன்ற ஃப்ரீஹேண்ட் (freehand) பயிற்சிகளைத் தவறாமல் செய்கிறேன். இதனை முழுக்க முழுக்க எனது கடின உழைப்பின் மூலமே அடைகிறேன். எனது கலையே எனது இருப்பு என உணர்கிறேன். தற்போது, எனது அடுத்த வாழ்க்கை வரலாற்றுப் படமான நிகம் படப்பிடிப்பை இப்போதுதான் முடித்தேன். இந்தப் படத்தின் கதாபாத்திரமும் எனது தோற்றத்தை மாற்றிக் கொள்ளும் விதமாகவே அமைந்து இருந்தது. அதற்கேற்றவாறே அமைத்துள்ளேன்.

டயட்: உணவு என்று எடுத்துக் கொண்டால், நான் ஒரு சைவ பிரியன். அதனால், எனது தினசரி உணவில் புரதச்சத்துக்காக பன்னீர், பருப்பு வகைகள், ப்ரோக்கோலி மற்றும் ஸ்கிம்டு பால் (skimmed milk) போன்றவற்றை சேர்த்துக்கொள்கிறேன். சமீபத்தில் நடித்த நிகம் படத்திற்காக, நான் சுமார் 9-10 கிலோ எடை அதிகரிக்க வேண்டியிருந்தது. அதற்காக தினமும் இரண்டு பீட்சாக்கள், நிறைய இனிப்புகள், எனக்குப் பிடித்தமான ஆலு பரோட்டா, வெஜ் பிரியாணி போன்றவற்றை அதிகமாக சாப்பிட்டேன்.

அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாகத் தோற்றமளிக்க, பகட்டான எதையும் பயன்படுத்தவில்லை. விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை நீங்கள் பார்க்கும்போது, ​​எனது கடின உழைப்பு அனைத்தையும் படத்தில் காண முடியும் என்று நம்புகிறேன். அடுத்ததாக இப்போது கூடியிருக்கும் இந்தக் கூடுதல் கிலோ எடையைக் குறைத்து, கங்குலி கதாபாத்திரத்தில் நடிக்கத் தயாராக வேண்டும்.எனது படைப்புகள் மூலம் ரசிகர்களை ஈர்க்கவும், மகிழ்விக்கவும் எப்போதும் கடுமையாக உழைக்க தயாராக இருக்கிறேன். அதற்காக தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுவதையும், டயட்டான விஷயத்திலும் மிக கவனமாக இருப்பேன்.

தொகுப்பு: ஸ்ரீ தேவி குமரேசன்