Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

எலும்புகளை வலுவாக்கும் பிரண்டை!

நன்றி குங்குமம் டாக்டர்

பிரண்டை எலும்புகளை வலுப்படுத்துதல், ஜீரண சக்தியை அதிகரித்தல், பசியைத் தூண்டுதல் மற்றும் உடல் எடையைக் குறைத்தல் போன்ற பல மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு சிறந்த மூலிகையாகும். மூட்டு வலி, ஈறு ரத்த கசிவு, வாயு தொல்லை மற்றும் மாதவிடாய் கோளாறுகளுக்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. பிரண்டையின் முக்கிய நன்மைகள்:

எலும்பு மற்றும் பற்கள் வலிமை: பிரண்டையில் உள்ள கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் உடைந்த எலும்புகளை விரைவாகக் கூடவும், எலும்பு தேய்மானத்தை (Osteoporosis) தடுக்கவும் உதவுகிறது. இதனால் இது ‘வஜ்ரவல்லி’ என்று அழைக்கப்படுகிறது.எலும்பின் உள்ளே இருக்கும் மஜ்ஜை என்ற பொருளில் எலும்பு செல்களை வளர்க்கும் ரசாயனம் உள்ளதாக கூறுகின்றனர்.

அதனால் எலும்பு வளர்ச்சியடையவும், உடலைத் தாங்கி இருக்கும் எலும்பு உறுதியாக இருக்கவும் உதவுகின்றது. எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் பிரண்டை உதவுகின்றது. எலும்புக்குத் தேவையான சுண்ணாம்புச்சத்து பிரண்டையில் அதிகமுள்ளது. மேலும் பிரண்டையில் பாஸ்பரஸ், கந்தகம் உள்ளதாகக் கூறுகின்றனர். எலும்பு வளர இந்த மூன்றும் தேவைப்படுகின்றது செரிமானம் மற்றும் பசி: பசியின்மை, அஜீரணக் கோளாறு, குடல் புண் (Ulcer) மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளைச் சரிசெய்து, ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.

மூட்டு வலி மற்றும் தசைப்பிடிப்பு: மூட்டு வலி, சுளுக்கு மற்றும் உடல் வலிப்பு (வாத நோய்கள்) போன்ற வற்றிற்குப் பிரண்டை சிறந்தது.

உடல் எடை குறைப்பு: கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

மூளை ஆரோக்கியம்: நரம்புத் தளர்ச்சியைப் போக்கி, ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளை நரம்புகளைப் பலப்படுத்தவும் உதவுகிறது.

ஈறு பாதுகாப்பு: வாய் துர்நாற்றம் மற்றும் ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவை நிறுத்துகிறது.

பயன்படுத்தும் முறை:பிரண்டையை நான்கு மூலையில் உள்ள தோலை நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். பிரண்டை அரிப்பு தன்மையுள்ளது. எனவே, கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு பின்னர் சுத்தம் செய்ய வேண்டும்,

பின்னர், துவையல், சட்னி, பொடி அல்லது சூப் போன்றவற்றை செய்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வாரத்திற்கு இருமுறை எடுத்துக்கொள்வது நல்லது.

குறிப்பு: பிரண்டையை உணவில் சேர்க்கும்போது, அதன் அரிப்புத் தன்மையைக் குறைக்க புளி மற்றும் நல்லெண்ணெய் சேர்த்துச் சமைப்பது அவசியம்.

தொகுப்பு: ரிஷி