Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

உடல் ஆரோக்கியமும் உணவுகளும்!

நன்றி குங்குமம் தோழி

* மெக்னீசியம்: கீரைகள், பருப்பு வகைகள், பாதாம், முந்திரி, பூசணி விதைகள், டார்க் சாக்லேட், முழுதானியங்கள். இந்த உணவுகள் தசை, நரம்பு செயல்பாடு, ரத்த அழுத்த கட்டுப்பாடு, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அவசியம்.

* பொட்டாசியம்: உருளைக்கிழங்கு, கீரை வகைகள், தக்காளி, வாழைப்பழம், பீன்ஸ், உலர் திராட்சை, பருப்புகள், கொட்டைகள் தசை, நரம்பு செயல்பாடு ஆரோக்கியத்துக்கு இது அத்தியாவசியமாக உள்ளது.

* துத்தநாகம்: கடல் உணவுகள், பூசணி விதைகள், முந்திரி, பருப்பு வகைகள், தயிர், டார்க் சாக்லேட். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், காயம் குணமடையவும் செல்களின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.

* கால்சியம்: பால், தயிர், சீஸ், ராகி, எள், பச்சை இலை கீரைகள், முருங்கை கீரை, பாதாம். பெரியவர்களுக்கு 1000 முதல் 1200 மில்லி கிராம் தேவை. எலும்புகள், பற்களின் ஆரோக்கியம், தசை செயல்பாட்டிற்கு கால்சியம் மிக முக்கியமானது.

உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் நீர் ஆகிய 7 முக்கிய ஊட்டச்சத்துக்கள் தினமும் தேவை. இவைகள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எலும்பு வலிமைக்கு மிக முக்கியமானது.

நார்ச்சத்து ஒரு நாளைக்கு 40 கிராம் அளவு.

வைட்டமின் E சத்து 15 மில்லி கிராம் அளவு.

வைட்டமின் C சத்து 75-90 மில்லி கிராம் அளவு.

வைட்டமின் A சத்து 600-900 மைக்ரோ கிராம் அளவு.

வைட்டமின் D சத்து முதியவர்கள் 20 மில்லி கிராம் அளவு.

புரதச்சத்து 46-56 கிராம் அளவு.

இரும்புச்சத்து பெண்களுக்கு 18 மில்லி கிராம் அளவு.

பி12 சத்து 2.4 மைக்ரோ கிராம் அளவு.

தொகுப்பு: எஸ்.மாரிமுத்து, சென்னை