Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நஞ்சை முறிக்கும் மிளகு!

நன்றி குங்குமம் டாக்டர்

உணவுக்கு சுவை சேர்ப்பதோடு, உடலுக்கு பலமும், நலமும் தரும் மிளகு பல மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. கருமிளகு, வெண்மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு என மிளகு பல வகையாக பயன்படுத்தப் படுகிறது. மிளகில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் ஆல்கலாய்டு, புரதம், கனிமங்கள் நிறைந்து உள்ளன.

நஞ்சை முறிக்கும் மருத்துவ குணம் மிளகுக்கு உண்டு. அதனால்தான், `பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம்’ என்ற பழமொழி உருவானது.

குளிர் காய்ச்சல், ரத்த சோகை, வாயு, சுவையின்மை, இருமல், பக்கவாதம், காதுவலி, காமாலை, செரியாமை போன்ற பல நோய்களை குணமாக்கும் தன்மை மிளகுக்கு உண்டு. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. பசியின்மை, வயிற்று உப்புசம், மலச்சிக்கலைப் போக்கும்.

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய திரிகடுகு இல்லாமல் சித்த மருத்துவம் செய்ய முடியாது. இவற்றில் சுக்கு வாதம் போக்கும், மிளகு பித்தத்தை சமப்படுத்தும், திப்பிலி கபத்தை சமப்படுத்தும்.

மிளகு, சுக்கு, திப்பிலி தலா 50 கிராம் எடுத்து பொடி செய்யவும். இதில் 1 கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டு வர சளி, இருமல் உள்ளிட்ட கப நோய்கள் தீரும்.

மிளகு, கீழாநெல்லி தலா 100 கிராம் எடுத்து பொடிக்கவும். அதில் 1 தேக்கரண்டி எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, கல்லீரல் வீக்கம் மற்றும் பித்தப்பை கற்கள் கரையும்.

மிளகை கொண்டு கஷாயம் வைத்து சாப்பிட, சளி, காய்ச்சல், தலைவலி, வாந்தி ஆகியவற்றை குணமாக்கும்.

மிளகுப்பொடி பக்கவாதம், மூட்டுவலி ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. தொண்டை கரகரப்பு, தோல்

வியாதிகளை குணமாக்குகிறது.

மிளகு, பெருங்காயம், சீரகம் சமஅளவு எடுத்து வறுத்து பொடித்து எலுமிச்சை சாற்றில் கலந்து அருந்த வாந்தி, பேதி நிற்கும். மிளகு, பெருஞ்சீரகம், தேன் கலந்து லேகியமாக்கி தினம் இருவேளை 5 கிராம் அளவுக்கு உண்ண முதியோருக்கும், மெலிந்தோருக்கும் உண்டாகும் மூலநோய் குணமாகும்.

ஆஸ்துமா மற்றும் மூக்கடைப்புக்கு மிளகைச் சுட்டு அதன் புகையை உள்ளிழுக்கலாம்.

மிளகு, உப்பு, வெங்காயம் மூன்றையும் அரைத்து தலையில் தடவ புழு வெட்டு குணமாகும்.

தொகுப்பு:- மகாலட்சுமி