நன்றி குங்குமம் டாக்டர்
பிளம் பழம் சிவப்பு, பச்சை, இளஞ்சிவப்பு, ஊதா, மஞ்சள் அல்லது ஆரஞ்சு போன்ற பல வண்ணங்களில் கிடைக்கிறது. அறிவியல் ரீதியாக, பிளம் பழம் ‘பிரூனஸ் டொமெஸ்டிகா’ (Prunus domestica) என்று அழைக்கப்படுகிறது.பிளம்ஸ் பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது இதய ஆரோக்கியம், செரிமானம் மற்றும் உடல் எடை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது
மருத்துவக் குணங்கள்
செரிமானத்தை மேம்படுத்துகிறது: இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் சர்பிடால் (Sorbitol) மலச்சிக்கல் பிரச்னையைத் தடுத்து, குடல் இயக்கத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம்: இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்டுகள் இரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிக்கவும், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. ரத்த சர்க்கரை கட்டுப்பாடு: பிளம்ஸ் பழம் குறைந்த கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) கொண்டுள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது.
எடை இழப்புக்கு உதவுகிறது: இதில் கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம். இதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி: இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, கிருமித் தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது
எலும்பு மற்றும் நரம்பு நலம்: வைட்டமின் கே, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் எலும்புகளின் அடர்த்தியைப் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கும் உதவுகின்றன
ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது: வைட்டமின் ஏ சத்து இந்தப் பழத்தில் நிறைந்துள்ளதால் இவை ரத்தத்தை விருத்தி செய்யும், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
கொழுப்பைக் கரைக்கும்: ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது. சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும்.
மன அழுத்தத்தைப் போக்கும்: மன அழுத்தத்தைப் போக்கி டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும். கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, இந்தப் பழத்திற்கு உண்டு.


