நன்றி குங்குமம் டாக்டர்
மலை வாழைப்பழத்தில் மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் அதிகம் உள்ளதால் உடலில் உள்ள செல்கள் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது மற்றும் உடனடி ஆற்றலைத் தருகிறது. நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் வைட்டமின் B6 இதில் நிறைந்துள்ளது மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவும் பொட்டாசியம் மிகுந்துள்ளது. மேலும், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் குமட்டலைக் குறைத்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் இது உதவுகிறது.
மலை வாழைப்பழத்தின் முக்கிய நன்மைகள்
மலச்சிக்கல் தீர்வு: இது குடல் இயக்கத்தை சீராக்கி, சிறு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் கடுமையான மலச்சிக்கலைப் போக்குகிறது.
உடனடி ஆற்றல்: இதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின் C, உடல் சோர்வை நீக்கி உடலுக்கு உடனடியாக சுறுசுறுப்பைத் தருகிறது.
மன அழுத்தம் குறைவு: மன அமைதிக்கு உதவும் செரட்டோனின் மற்றும் மெலடோனின் சத்துக்கள் இதில் இயற்கையாகவே நிறைந்துள்ளன.
தாய்ப்பால் சுரப்பு: பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கி, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.
*நூறு கிராம் மலை வாழைப்பழத்தில் 80 கிராம் கலோரிகள் இருப்பதால் உடல் பருமனாக இருப்பவர்கள் கூட இதை தாராளமாக சாப்பிடலாம்.
*மலக் குடலில் வரும் புற்றுநோயை தடுப்பதில் மலை வாழைப்பழத்துக்கு பெரும் பங்கு உண்டு.
* நாம் உண்ணும் உணவுகளை விரைவில் ஜீரணிக்கும் தன்மை மலை வாழைப்பழத்தில் இருப்பதால், உண்ட உணவு எளிதில் செரிமானமாகும்.
*ஃபரக்டோஸ் லாக்டோஸ் அதிகம் இருப்பதால் ஆறுமாத குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை தாராளமாக சாப்பிடலாம்.
*இதில் சோடியம் அதிகம் உள்ளதால், சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் மலை வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது.
*மலை வாழைப்பழத்துடன் கற்கண்டு, தேன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மந்தத்தைப் போக்கி பசியைத் தூண்டும்.
*ரத்த சோகையைப் போக்கி, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் தன்மை மலை வாழைக்கு உண்டு.
*உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு தொடர்ந்து மலை வாழைப்பழத்தை கொடுத்து வர நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும்.
தொகுப்பு:- மகாலட்சுமி சுப்ரமணியன்



