நன்றி குங்குமம் டாக்டர்
பவளமல்லி
உடல்வலி, காய்ச்சல், சளி, இருமல் வயிற்று புழுக்கள் பிரச்னைகளுக்கு பவளமல்லி மருந்தாகிறது பல்வேறு நன்மைகளை கொண்ட பவளமல்லி சொரசொரப்பான இலைகளை கொண்டது. கொத்தான பூக்களை உடையது. காம்புகள் சிவப்பு நிறமும் பூக்களின் இதழ்கள் வெள்ளை நிறமும் உடையவை. இந்த பூக்கள் நல்ல மணத்தை கொண்டது. பவளமல்லி இலைகளை பயன்படுத்தி காய்ச்சலை தணிக்கும் கஷாயம் தயாரிக்கலாம்.
பவளமல்லி இலைகளோடு சிறு துண்டு இஞ்சி எடுத்துக் கொண்டு சுத்தம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க விடவும் கொதித்து பாதியானதும் வடிகட்டி தினமும் இருவேளை குடிப்பதால் சிக்கன்குனியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் சரியாகும். சளி, இருமல் கட்டுக்குள் வரும் ரத்த வட்ட அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அதிகரிக்கும். பவளமல்லி இலைகள் நோய் நீக்கியாக விளங்குகிறது. வியர்வையை தூண்டக்கூடியது. காய்ச்சலை தணிக்கும். வலி, வீக்கத்தை குணப்படுத்தும் தன்மை கொண்டது. பவளமல்லி இலைகளை தேனீராக்கி குடிப்பதால் விஷகாய்ச்சல் அனைத்தும் தணியும் இடுப்புவலி, கைகால் வலி உள்ளிட்ட வலிகளையும் போக்கக் கூடியதாக பயன்படுகிறது பூஞ்சைத் தொற்றை குணப்படுத்துகிறது.
இவ்வாறு பலவித நன்மைகள் கொண்ட பவளமல்லியை வீட்டிலேயே வளர்த்து பயன்பெறலாம். செண்பகப் பூசெண்பகப்பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வர உடல் பலம் பெறும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நீங்க நீரிலிட்டு காய்ச்சி பூவை வடிகட்டி அருந்திட நல்ல குணம் கிடைக்கும்.
செண்பகப்பூவின் கஷாயத்தை காலை, மாலை குடித்து வர அனைத்து நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.அதிக சூட்டினாலும், இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழிப்பதாலும் நரம்புத் தளர்ச்சி உண்டாகும். இதற்கு செண்பகப்பூவை கஷாயம் செய்து அதில் பனங்கற்கண்டு சேர்த்து அருந்த, நரம்புத் தளர்ச்சி நீங்கும்.செண்பகப்பூவை நீரில் ஊற வைத்து 30 மி.லி. அளவு குடித்து வர காய்ச்சல், வலி, குமட்டல் குணமாகும். இலைகளை அரைத்து அதன் சாறில் தேன் கலந்து சாப்பிட வயிற்றுவலி குணமாகும்.
செண்பகப்பூ கஷாயம் பித்தத்தைக் குறைக்கும், வாந்தி, தலைசுற்றல், மயக்கம் தீர்க்கும். செண்பக இலையில் நெய்யை தடவி அதில் ஓமத்தைப் பொடி செய்து தூவி, தலையில் வைத்து கட்டிக் கொள்ள, அதிக வெப்பத்தினால் உண்டான தலைவலி, தலைபாரம் குறையும். செண்பகப்பூவை கஷாயம் செய்து அதில் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட கண்பார்வை தெளிவு பெறும்.,
தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்


