நன்றி குங்குமம் டாக்டர்
பலரும் விளக்கெண்ணெய் விளக்கு எரிக்க மட்டும்தான் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால், விளக்கெண்ணெயை சமையலிலும் பயன்படுத்தலாம் மருந்தாகவும் பயன்படுத்தலாம். இப்படி விளக்கெண்ணெய் சாதாரண பயன்பாட்டில் உள்ள ஒரு உணவுப் பொருள்தான். விளக்கெண்ணெய் (ஆமணக்கு எண்ணெய்) பயன்பாடுகள்
விளக்கெண்ணெய் சிறந்த மலமிளக்கியாகவும், வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. இதில் உள்ள ‘ரிசினோலிக் அமிலம்’ (Ricinoleic acid) பல்வேறு மருத்துவக் குணங்களை வழங்குகிறது.
மலச்சிக்கல் தீர: குடலியக்கத்தைத் தூண்டி, மலச்சிக்கலைப் போக்க இது அருமருந்தாகப் பயன்படுகிறது.
மூட்டு வலி மற்றும் வீக்கம்: விளக்கெண்ணெயை வெதுவெதுப்பாக மாற்றி மூட்டு வலி அல்லது தசைப் பிடிப்புள்ள இடங்களில் தடவி ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறையும்.
சருமப் பராமரிப்பு: வறண்ட சருமத்தை மிருதுவாக்கவும், உதடு வெடிப்பு, காயங்கள் மற்றும் முகப்பருக்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது
முடி வளர்ச்சி: தலைமுடி மற்றும் புருவங்களில் தடவிவர முடி உதிர்வதைத் தடுத்து, முடி அடர்த்தியாக வளர உதவும்.
கண் எரிச்சல்: சிறிதளவு விளக்கெண்ணெயைக் கண்களின் ஓரங்களில் தடவினால் கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சி கிடைக்கும்.
குறிப்பு: விளக்கெண்ணெயை உட்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
முழங்கால் வலி, வீக்கம்: “ஆமணக்கு இலைகள எடுத்து சின்னதாக நறுக்கி, விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, சூட்டுடன் வலியுள்ள முழங்காலையும் (arthritis), வீக்கமுள்ள இடத்திலும் ஒத்தடமிடலாம்.”
மாதவிடாய் காலத்தில் வரும் அடிவயிறு வலி: பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிறு வலிக்கு, அடி வயிற்றில் விளக்கெண்ணெயை தடவி, அதன்மேல் வதக்கிய ஆமணக்கு இலைகளை வைத்து கட்டி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பால் சுரப்பு அதிகரிக்க: ஒரு தம்ளர் தண்ணீரில் 5-6 ஆமணக்கு இலைகளைச் சேர்த்து காய்ச்சிய வெந்நீர் கொண்டு பாலூட்டும் தாய்மார்கள் மார்பகங்களில் ஒத்தடம் தந்து, ஆமணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்து கட்டிவர, பெண்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும்.
தொகுப்பு: - ரிஷி



