Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மரவள்ளிக் கிழங்கின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு உணவுப் பொருட்களும், ஒரு வகையான மருத்துவ குணங்களைக்கொண்டு இருக்கின்றன. காய்கறிகள், கீரைகளைப் போலவே கிழங்கு வகைகளிலும் வைட்டமின்களும், தாது பொருட்களும், நார்ச்சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன. அவ்வகையில், மரவள்ளிக் கிழங்கில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன. அவற்றின் மருத்துவ குணங்களைத் தெரிந்து கொள்வோம்.

மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும். ரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைக்கிறது.

மரவள்ளிக்கிழங்கில் உள்ள இரும்பு, தாமிரம் ரத்த சோகையை கட்டுப்படுத்தும். அதிக நார்சத்து இருப்பதால் எளிதில் சீரணமாக உதவும். இதில் இடம் பெற்றுள்ள புரதசத்தும், வைட்டமின் கேவும், எலும்பு மற்றும் திசுக்கள் ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது.

இதன் மாவுப் பொருளில் இருந்து ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. இது கஞ்சி, பாயசம் செய்ய உதவும். இக்கஞ்சி வயிற்று புண் ஆறுவதற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இக்கிழங்கிலிருந்து சிப்ஸ், முறுக்குகள் போன்ற சிற்றுண்டிகளும் தயாரிக்கப்படுகின்றன.

மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் பல்வேறு துறைகளில், குறிப்பாக பருத்தி மற்றும் சணல் ஆடைகள் உற்பத்தி, காகிதம், நாட்காட்டி தயாரிப்பு, கோந்து மற்றும் கெட்டியான அட்டைகள் தயாரிக்கும் தொழிலில் முக்கியமான மூலப்பொருளாக பயன்படுகிறது. மரவள்ளிக்கிழங்கு சாப்பிடும்போதோ அல்லது சாப்பிட்ட பின்போ அன்றைய நாளில் இஞ்சி அல்லது சுக்கு சாப்பிடக்கூடாது. மரவள்ளிக்கிழங்கின் தன்மையால், அவை உடலுக்கு விஷமாக மாறிவிடும் வாய்ப்பு உண்டு.

செரிமான மண்டலம்

மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளையும் வெளியேற்ற உதவுகின்றன. செரிமான மண்டலத்தை சீராக்கி, மென்மையான குடல் இயக்கத்துக்கு வழிவகுக்கிறது.

உடல்பருமன்

இயற்கையாக உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், மரவள்ளி கிழங்கை அன்றாட உணவில் எடுத்துக் கொண்டால், அவற்றில் இருக்கும் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும், மரவள்ளிக்கிழங்குக்கு ஞாபக சக்தியை வளர்க்கும் ஆற்றல் உண்டு. அத்துடன், ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மரவள்ளி கிழங்குகளில் இருக்கும் வைட்டமின் கே மற்றும் கால்சியம் ஆகியவை எலும்புகளை வலுவாக்குகின்றன.

தொகுப்பு:- ரிஷி