Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

புகைப்பழக்கத்திலிருந்து மீள்வோம்….

நன்றி குங்குமம் டாக்டர்

புகையிலைப் பழக்கத்தை நிறுத்தும்போது ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா...அதனை எவ்வாறு சமாளிப்பது?

புகைப்பழக்கத்தை நிறுத்தும்போது சில சைட் எப்க்ட்ஸ் இருக்கத்தான் செய்யும். அந்த பழக்கத்தை நிறுத்த முடியாமல் தவிப்பார்கள், அதிக கோபம், டென்ஷன், வேலையில் நாட்டமின்மை, கவன குறைவு, மலச்சிக்கல், தலைவலி போன்ற பாதிப்புகள் இருக்கும். அதனால்தான், நீண்ட கால புகைப்பழக்கத்தை திடீரென விடும்போது மருத்துவரின் ஆலோசனை எடுத்துக்கொண்டால், அவர்கள் அவரது தேவைகேற்ப சில சிகிச்சை முறைகளை பரிந்துரைப்பார். அதனால் மிகவும் கஷ்டப்படாமல் அந்த பழக்கத்திலிருந்து வெளிவரலாம்.

பரிசோதனைகள் முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஏதாவது சிக்கல் இருந்தால் பின்னர் அதற்கேற்றவாறு வேறு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

புகையிலைப் பழக்கத்தை நிறுத்திய பிறகு உடலில் என்னென்ன நல்ல மாற்றங்கள் ஏற்படும்? அவை எவ்வளவு காலத்தில் தொடங்கும்?

புகைப்பழக்கத்தை நிறுத்திய 20 ஆவது நிமிடத்தில் இருந்தே நமக்கு உடலில் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். புகையிலையை நிறுத்திய பின், 12 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரத்திற்குள் கார்பன் மோனாக்சைடு அளவு குறைந்து, சில வாரங்களில், சுவாசம் மேம்படுகிறது; ஒரு மாதத்தில் நுரையீரல் செயல்பாடு சீராகும். ஓர் ஆண்டில் இதய நோய் வருவதற்கான அபாயம் பாதியாக குறைகிறது; 5 ஆண்டுக்குள் வலிப்பு வருவதற்கான அபாயம் குறைகிறது. 10 ஆண்டுகளுக்குள் புற்றுநோய் வருவதற்கான ஆபத்தும் குறைகிறது.

E-cigarette அல்லது வேப்பிங் (Vaping) பயன்படுத்துகிறார்களே இதனால் பாதிப்பு இல்லையா?

இ-சிகரெட் அல்லது வேப்பிங் பொருத்தவரை, சிலர் என்ன நினைக்கிறார்கள் என்றால், சிகரெட் பழக்கத்தை விடுவதற்காக இ- சிகரெட்டுக்கு மாறிவிடலாம் என்ன நினைக்கிறார்கள். ஆனால், இ- சிகரெட்டிலும் நிகோடின் மற்றும் ஃபேளவருக்காக நச்சுப் பொருள் சிலவற்றை சேர்க்கிறார்கள். அதனால், இதுவும் நிமோனியா, நுரையீரல் அழற்சி போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும், சிகரெட்டினால் என்ன பாதிப்புகள் ஏற்படுமோ அதே பாதிப்பு இதிலும் உண்டு.

புகையிலைப் பழக்கத்தை விட்டுவிடுவதற்கான சிறந்த மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் என்ன?

புகைப்பழக்கத்தை விட்டுவிடுவதற்கான முதல்படி என்றால், அது புகைப்படிப்பவர்கள், புகைப்பதை விட வேண்டும் என்று மனதளவில் உறுதியாக இருக்க வேண்டும். அதன்பின்னர், அவர்களுக்கு எப்படி நிறுத்த வேண்டும் என்று தெரியவில்லை என்றால், அதற்கான பயிற்சி வகுப்பு கிளினிக் இருக்கிறது. அந்த பயிற்சி வகுப்புகளில் ஒருவர் எந்தளவிற்கு புகைப்பழக்கத்துக்கு அடிக்சனாக இருக்கிறார். ஒருநாளைக்கு எத்தனை சிகரெட்டை பிடிக்கிறார் அல்லது புகையிலை பழக்கத்துக்கு எவ்வளவு அடிக்கட்டாக இருக்கிறார் என்பதை பொருத்து அவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை தேவை என்று ஆய்வு செய்து அதன்பின்னர் சிகிச்சையை  மேற்கொள்வார்கள்.

தொகுப்பு:- ஸ்ரீ தேவி குமரேசன்