Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வீட்டுமுறை ஆரோக்கியக் குறிப்புகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

*பச்சை நெல்லிக்காயை பற்களால் கடித்து சாப்பிட, பற்களிலுள்ள கறைகள் நீங்கிவிடும்.

*ஜாதிக்காயை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட, வயிற்றுவலி குணமாகும்.

*நாள்தோறும் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு தம்ளர் மோரில் கலந்து குடிக்க இடுப்பு பகுதியில் கொழுப்பு சேராது.

*பூண்டு சாற்றில் உப்பு கலந்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி விட சுளுக்கு மறையும்.

*வெற்றிலை, ஓமம் இடித்து பிழிந்து தேன் கலந்து அருந்த குடற்புண், வயிற்று பிரச்னைகள் சரியாகும்.

*உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் இதயநோய் குணமாகும். மாதவிடாய் கோளாறுகள் தீரும்.

*புடலங்காயின் இலைச்சாற்றை சிறிதளவு வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு காலையில் கொடுத்து வர, கக்குவான் இருமல் போன்ற நோய்கள் குணமாகும். மேலும், புடலங்காயை சமைத்து உண்டு வந்தால் உடல்எடை குறையும் மற்றும் மலச்சிக்கல் தீரும்.

*அருகம்புல் சாற்றுடன் மோர் கலந்து குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

*கொத்துமல்லி விதையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறியபின் அந்த தண்ணீரில் கண்களை கழுவி வந்தால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும். கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

*சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் குடித்து வந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

*வெங்காயத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட்டு வந்தால் பித்த நோய்கள் தீரும்.

*முள்ளங்கியை சமைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட மூல நோயும் குணமாகும்.

*பூசணிக்காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு, தலைசுற்றல் போன்ற நோய்கள் வராமல் கட்டுப்படுத்தலாம்.

*பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாகவும், வைட்டமின் ஏ, சி, மக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் அடங்கியுள்ளது. இதில் உள்ள நிறமி, கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்க உதவுவதோடு, ரத்தத்தை சுத்தம் செய்கிறது. மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கவும் உதவுகிறது.

தொகுப்பு: சுப்ரமணியம்