Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பாட்டி வைத்தியம்!

நன்றி குங்குமம் தோழி

*தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் வெள்ளைப் பூண்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இதய நோய் வருவது கட்டுப்படுத்தப்படும். உடலிலுள்ள நச்சுக்கள், புழுக்கள் வெளியேறி விடும். தமனிகளை சுத்தம் செய்யும். எலும்புகளை வலிமையாக்கும். அஜீரணம் மற்றும் பசியின்மையை போக்கும். கெட்ட கொழுப்பை கரைக்கும்.

*வெற்றிலையில் சிறிது பெருங்காயத்தை வைத்து சாப்பிட வாந்தி பேதி குணமாகும்.

*வெற்றிலைச் சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

*வெற்றிலையை மென்றுச் சாப்பிடுவதால் மலச்சிக்கல் தீரும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

*ஒரு வெற்றிலையில் இரண்டு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சளை வைத்து மென்று தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குணமாகும்.

*வெற்றிலைச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் இருமல் குறையும்.

*வெறும் வெற்றிலையில் தேனை விட்டு மடித்து தினமும் இரண்டு வேளையில் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் நன்கு வலுவடையும்.

*வாழைப்பழத்தை பிசைந்து தீப்புண் மீது தடவி, வெற்றிலையை அதன் மீது மூடி, துணியில் கட்டுப்போட்டு வந்தால் தீப்புண்கள் ஆறிவிடும்.

*வெற்றிலையையும், மிளகையும் சேர்த்தரைத்து 2 கிராம் அளவு உட்கொண்டால் நாள்பட்ட விஷக்கடியும் குணமாகும்.

*சீரகம், வெள்ளைப்பூண்டு இவையிரண்டையும் கொதி கஞ்சியில் அரைத்து, காலை ஒரு வேளை குழந்தைக்குக் கொடுத்தால் வயிற்றிலுள்ள புழுக்கள் வயிற்றிலேயே செத்து மலத்துடன் வெளியேறிவிடும்.

*வெள்ளைப்பூண்டை அரைத்து உள்ளங்காலில் பற்றுப்போட்டால் மலேரியா காய்ச்சல் குணமாகும்.

*பூண்டின் சாற்றில் நவச்சாரத்தை கலந்து வெண் குஷ்டத்தின் மேல் தடவி வர நிறம் மாறி இயற்கை நிறம் வந்து விடும்.

*கடுகை அரைத்து நீரில் கலக்கிக் கொடுத்தால் உண்ட நஞ்சு உடனடியாக வெளியாகும்.

*10 மிளகை எடுத்து தூளாக்கி நெய்யில் சாப்பிட புண்களில் இருந்து வடியும் ரத்தம் நின்றுவிடும்.

*முட்டைக்கோஸ் சாறு அல்சரை குணமாக்கும்.

தொகுப்பு: இரா.ரெங்கசாமி, தேனி