Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மென்மையான பாதங்களுக்கு...

நன்றி குங்குமம் டாக்டர்

நாள் முழுவதும் நம்மைத் தாங்கி நிற்கும் பாதங்களுக்கு நாம் கொடுக்கும் கவனம் பெரும்பாலும் மிகவும் குறைவு. அதிக நேரம் நிற்பது, நீண்ட நேரம் நடப்பது, இறுக்கமான காலணிகளை அணிவது, வறண்ட சருமம், போதுமான ஈரப்பதம் இல்லாமை போன்ற காரணங்களால் பாதங்களில் வறட்சி, வெடிப்பு, கடினமான சருமம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். குறிப்பாக குதிகால் பகுதியில் சருமம் தடித்து, வெடிப்புகள் உருவாகும்போது வலி மற்றும் அசௌகரியமும் ஏற்படலாம். சில எளிய பழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் பாதங்களை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்.

தினமும் சுத்தம் செய்யவும்

வெளியில் சென்று வந்தபிறகு பாதங்களைத் தண்ணீரில் நன்றாகக் கழுவி சுத்தம் செய்வது அவசியம். விரல்களுக்கு இடையில் அழுக்கு மற்றும் ஈரப்பதம் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதங்களைக் கழுவிய பிறகு, குறிப்பாக விரல்களுக்கு இடையில், மென்மையான துணியால் நன்றாகத் துடைத்து உலர்த்த வேண்டும்.

ஈரப்பதத்தைத் தக்கவைக்க மென்மையான பாதங்களுக்கு மாய்ஸ்

சரைசர் மிகவும் முக்கியம். குளித்த பிறகு பாதங்களைத் துடைத்தவுடன், சருமம் சற்று ஈரமாக இருக்கும்போதே நல்ல மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். குதிகால் பகுதியில் சருமம் அதிகமாக வறண்டு இருந்தால், யூரியா அல்லது லாக்டிக் அமிலம் போன்ற ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் பொருட்கள் உள்ள foot cream உதவியாக இருக்கலாம்.

இறந்த செல்கள் அகற்றுங்கள்

பாதங்களில் தடித்த சருமம் அல்லது dead skin இருந்தால், வாரத்திற்கு ஒருமுறை மென்மையான முறையில் exfoliation செய்யலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் சில நிமிடங்கள் பாதங்களை வைத்தபிறகு, மென்மையான foot file அல்லது pumice stone மூலம் தடித்த சருமத்தை மெதுவாக அகற்றலாம். ஆனால் அதிகமாக தேய்ப்பது அல்லது கூர்மையான பொருட்களால் சருமத்தை வெட்டுவது கூடாது. அவ்வாறு செய்வது காயம் மற்றும் தொற்று ஏற்பட வழிவகுக்கும்.

காலணிகளிலும் கவனம்

பாத ஆரோக்கியத்தில் காலணிகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது. மிகவும் இறுக்கமான அல்லது சரியான அளவு இல்லாத காலணிகளைத் தொடர்ந்து அணிவதால் callus, corns மற்றும் பாதலி போன்றவை ஏற்படலாம். பாதத்தின் வடிவத்துக்கு ஏற்ற, காற்றோட்டம் உள்ள காலணிகளைத் தேர்வு செய்வது

நல்லது. காலுறைகளை தினமும் மாற்றுவதும் பாதங்களை சுத்தமாக வைத்திருக்க உதவும்.

பாதங்களுக்கு ஓய்வும் தேவை

நீண்டநேரம் நிற்கும் அல்லது நடக்கும் பழக்கம் இருப்பவர்கள் அவ்வப்போது பாதங்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். வீட்டில் இருக்கும்போது சில நிமிடங்கள் பாதங்களை உயர்த்தி வைப்பது சோர்வைக் குறைக்க உதவும். பாதம் மற்றும் கணுக்கால் பகுதிக்கு மென்மையான stretching பயிற்சிகளையும் செய்யலாம்.

தொகுப்பு:- ரிஷி