Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நார்ச்சத்து நிரம்பிய உணவுகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

நமது ஆரோக்கியத்தின் எதிர்காலம் நாம் உண்ணும் ஊட்டச்சத்து உணவைப் பொறுத்தது. அந்த வகையில், நார்ச்சத்து என்பது அன்றாட உணவில் நமக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். நார்ச்சத்து பசி மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும், மலச்சிக்கலை போக்குகிறது. எனவே, நமது தினசரி உணவில் கட்டாயம் நார்ச்சத்து இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியமாகும்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் சிலவற்றை பார்ப்போம்:

பீன்ஸ்- பீன்ஸ் வகைகளில் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. அவற்றை சூப்பாகவோ, பொரியல் மற்றும் சாலட்சாகவோ உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு அரை கப் வேகவைத்த சோயாபீன்னில், கிட்டத்தட்ட 9 கிராம் நார்ச்சத்து உள்ளது.

பச்சைக் கீரை (பச்சை இலைகள்) - கீரையின் ஊட்டச்சத்து மதிப்பு, மற்ற காய்கறிகளை விட பல மடங்கு அதிகம். கீரைச் சத்துகள் நிறைந்த ஆகாரம்; அதில் நார்ச்சத்து, இரும்பு, கால்சியம், வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரதங்கள் போன்ற சத்துக்கள் உள்ளன.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு - சர்க்கரை வள்ளிகிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. தோலுடன் கூடிய ஒரு சிறிய உருளைக்கிழங்கில் கிட்டத்தட்ட 3 கிராம் நார்ச்சத்து இருக்கும்.

நட்ஸ் - நட்ஸ் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் மூலாதாரமாக அறியப்படுகிறது. அதுமட்டுமின்றி, அவற்றில் நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. சூரியகாந்தி விதைகளில் 3 கிராமுக்கு மேல் நார்ச்சத்து உள்ளது. நட்ஸில் இருந்து எடுக்கப்படும் வெண்ணெய்களில் கூட, அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.

முழு தானியங்கள் - முழு தானியம் மற்றும் முழு கோதுமை போன்ற உணவு வகைகளில், அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. முழுமையான தானியங்கள், முழு கோதுமை ரொட்டி, பழுப்பு அரிசி, முழு கோதுமை பாஸ்தா மற்றும் ஓட்ஸ் போன்ற உணவு வகைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளன. குழந்தைகளுக்கு துரித உணவுப் பொருட்களை சாப்பிட கொடுப்பதற்குப் பதிலாக, முழு தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நார்ச்சத்து நிறைந்த உணவைக் கொடுப்பது நல்லது.

பெர்ரி - பெர்ரிகளில் முழு நார்ச்சத்து உள்ளது. ஒரு கப் நெல்லிகளை சாப்பிடும்போது, கிட்டத்தட்ட 4 கிராம் நார்ச்சத்து கிடைக்கும். ப்ளாக்பெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரிகள் போன்றவை பல்வேறு வகையான பெர்ரிகளாகும்.

சோளம் - சோளத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே, நார்ச்சத்து நிறைந்த மக்காச்சோள உணவுகளை தினசரி எடுத்துக் கொள்ளலாம்.

ப்ரக்கோலி, கேரட் மற்றும் பீட்ரூட் - ப்ரக்கோலி நார்ச்சத்துக்கான சிறந்த உணவாகும். அதேபோன்று கேரட் மற்றும் பீட்ரூட்டிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் (வைட்டமின் ஏ) ஒரு நல்ல சத்தாகும்.

தொகுப்பு:- ஸ்ரீ