நன்றி குங்குமம் தோழி
Pilates Workout at Home App
Pilates, நம்மு டைய உடலில் உள்ள தசைகளை வலிமையாகவும், உடல் சமநிலை, நெகிழ்வுத்தன்மை மற்றும் உடல் அமைப்பை மேம்படுத்தும் உடற்பயிற்சி முறை. ஜிம் செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இந்தப் பயிற்சிகளை நாம் செய்யலாம். அப்படிப்பட்ட உடற்பயிற்சிகளை Pilates Workout at Home Appன் வழிகாட்டுதல் மூலம் வீட்டிலிருந்தபடியே தினசரி உடற்பயிற்சி செய்யலாம்.
Pilates பயிற்சிகள் செய்வதால், உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், உடலின் தசை வளர்ச்சி அதிகரித்து, மெட்டபாலிசம் மேம்படும். எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கம் தொப்பை குறையும், வயிற்றுத் தசைகள் உறுதியாகும், முதுகுவலியை குறைக்க உதவும், மூட்டுகள் சுலபமாக இயங்கும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.
இந்தப் பயிற்சியினை அலுவலகம் செல்பவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடலின் அமைப்பினை மேம்படுத்த விரும்புபவர்களுக்கு சிறந்தது. அதே சமயம் கர்ப்பிணிகள், சமீபத் தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், கடுமையான முதுகுத்தண்டு பிரச்னை, மூட்டு வலி மற்றும் இதய நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று பிறகு பின்பற்றலாம். இந்த ஆப்பில் அனைத்து பயிற் சிகளும் இருந்தாலும் முதலில் தொடக்கநிலையில் உள்ள பயிற்சிகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். உடலை வற்புறுத்தி பயிற்சிகளில் ஈடுபடக்கூடாது. வலி ஏற்பட்டால் உடனே நிறுத்திவிட வேண்டும். தினமும் 20-30 நிமிடங்கள் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை தரும்.
Pilates Workout at Home App என்பது வீட்டிலேயே பாதுகாப்பாகவும் திட்டமிட்ட முறையிலும் உடற்பயிற்சி செய்ய விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். இது உடல் வலிமை, நெகிழ்வுத்தன்மை, சமநிலை மற்றும் உடல் அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் முதுகுவலி குறைதல், உடல் நிலை மேம்பாடு, மனஅழுத்தக் குறைவு போன்ற பல நன்மைகளை பெறலாம்.
உடற்பயிற்சியுடன் சரியான உணவுமுறை, போதுமான தூக்கம் பின்பற்றினால் மட்டுமே சிறந்த பலன்களை பெற முடியும். ஏற்கனவே உடல்நலப் பிரச்னைகள் இருப்பவர்கள் அல்லது கர்ப்பிணிகள், புதிய உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன் மருத்துவர் அல்லது தகுதியான உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.இந்த ஆப் வீட்டிலேயே Pilates பயிற்சிகளை படிப்படியாக கற்றுக்கொடுக்க உருவாக்கப்பட்டது. தொடக்கநிலை முதல் மேம்பட்ட நிலை வரை பல்வேறு பயிற்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆப்பினை நம்முடைய செல்போனில் பதிவிறக்கம் செய்வதால், வீடியோ மூலம் பயிற்சியினை மேற்கொள்ளும் முறை, தினசரி உடற்பயிற்சி திட்டங்கள், உடல் எடையினை குறைக்கும் வழிகாட்டி, வயிற்றுத் தசையினை வலுப்படுத்தும் பயிற்சிகள், கலோரிகள் கண்காணிப்பு என அனைத்தும் உள்ளன. மேலும், அனைத்தும் வீடியோ பயிற்சிகள் என்பதால் அதைப் பார்த்து நாம் தொடர்ந்து செய்து வந்தாலே ஆரோக்கிய வாழ்வினை பெற முடியும்.
தொகுப்பு: மகி



