Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நோய்களும் மூலிகை மருந்துகளும்!

நன்றி குங்குமம் டாக்டர்

சில நோய்களுக்கு மருந்தாகும் மூலிகைகள் குறித்து தெரிந்து கொள்வோம்:

மூளை: சங்கு புஷ்பம், வெட்டிவேர், வெப்பாளை, தாமரை

தலை: குங்குமப்பூ, வெட்டிவேர், கரிசலாங்கண்ணி, அதிமதுரம், முருங்கை, தாமரைப்பூ.

மனபாதிப்புகள்: அசுவகந்தி, அசோகமரம், அதிமதுரம், குங்குமப்பூ, நிலவேம்பு, வில்வம்

மயக்கம்: சீத்தாப்பழம்

திக்குவாய்: வல்லாரை, தாமரை

கண்கள்: குங்குமப்பூ, அசுவகந்தா, அதிமதுரம், தேயிலை

பல் - லவங்கப்பட்டை

நெஞ்சு - ஆஸ்துமா, அம்மான் பச்சரிசி, ஆடாதொடை, குப்பைமேனி, முருங்கை, தாமரை, துத்தி, நாவல், பூண்டு, முருங்கை, லவங்கப்பட்டை

வயிறு (அடிவயிறு) வேங்கை, நாவல், வெங்காயம், பூண்டு, முள்ளங்கி, வசம்பு, வில்வம், சங்குபுஷ்பம், வெப்பாளை, பிரண்டை, பாகல், நாவல், நிலவேம்பு, லவங்கப்பட்டை, இஞ்சி, பேய்ப்பீர்க்கன், காட்டுச்சீரகம், தாமரை, புங்கன், பப்பாளி, கீழாநெல்லி, குங்குமப்பூ, தேயிலை, துத்தி (மூலம்), கற்றாழை, பூண்டு (கொலஸ்டிரால்)

ஈரல் வெண்மருது, மஞ்சள்

குடல் புழுக்கள் அம்மான் பச்சரிசி, காட்டுச் சீரகம், வெப்பாளை, கற்றாழை

சிறுநீர்க் கோளாறுகள் சீத்தாப்பழம், துத்தி, வல்லாரை, அசுவகந்தி, முள்ளங்கி, காட்டுச் சீரகம், கற்றாழை

நீரிழிவு: பாகல், வேங்கை, நாவல், வெங்காயம், நித்தியகல்யாணி, துத்தி, அம்மான்பச்சரிசி, வெப்பாளை, பேய்பீர்க்கன், நிலவேம்பு, கீழாநெல்லி, தேயிலை, கரிசலாங்கண்ணி, நெருஞ்சில்.

சிறுநீரகம்: கார்போக அரிசி, ஓமம், துளசி, மூக்கிரட்டை, அசுவகந்தி, வெட்டிவேர், ஆடாதொடை, கரிசலாங்கண்ணி, முருங்கை, மஞ்சள், வெண்மருது, முள்ளங்கி

சிறுநீரகக் கற்கள் நெருஞ்சில், முள்ளங்கி, பசலை

மூத்திரப்பையில் கற்கள் - கண்டங்கத்திரி

பாலுறுப்பு கீழாநெல்லி, சீத்தாப்பழம் (புராஸ்டேட் சுரப்பி), பசலை, கற்றாழை

பாலுணர்வு: பூண்டு, குங்குமப்பூ, சர்ப்பகந்தி, நெருஞ்சில், சீத்தாப்பழம், அசுவகந்தி, வசம்பு, முருங்கை, குங்குமப்பூ, பசலை, அதிமதுரம், ஓரிதழ்தாமரை மாதவிடாய் நெருஞ்சில், அசோகு, பப்பாளி, கீழாநெல்லி

கர்ப்பாசயம் கர்ப்பகந்தி, அசோகு, துத்தி, பாகல், வில்வம், கீழாநெல்லி, குங்குமப்பூ, அசுவகந்தி, கற்றாழை, பசலை (வெள்ளைப்படுதல்)

மலடு: அசுவகந்தி, சீத்தாப்பழம், கல்யாண முருங்கை, முடக்கற்றான், லவங்கப்பட்டை

வாதம் (எலும்பு, மூட்டுவலி, வீக்கம்): பூண்டு, நெருஞ்சில், வசம்பு, வல்லாரை, பிரண்டை, நுணா, ஆடாதொடை, கல்யாண முருங்கை, முருங்கை, முடக்கற்றான், அதிமதுரம், கற்றாழை

தோல்: முடக்கற்றான், பேய்ப்பீர்க்கன், அதிமதுரம், கீழாநெல்லி, தேயிலை, நுணா, சீத்தாப்பழம், வேங்கை (வெண்புள்ளிகள்), பூண்டு, தீக்கொன்றை, கார்போக அரிசி (வெண் புள்ளிகள்), நிலவேம்பு, அசுவகந்தா வெள்ளைப் புள்ளிகள்.

தொகுப்பு: மருத்துவர். ஜி.லாவண்யா