Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

புற்றுநோய் காரணிகளும் அறிகுறிகளும்!

நன்றி குங்குமம் டாக்டர்

புற்றுநோய் என்பது வெவ்வேறான பல பிரிவுகள் கொண்ட நோய் வகைகளை சாரும். அதன் காரணங்களிலும், உயிரிகளிலும் பரவலாக வேறுபடுகின்றன. எந்த உயிரினமானாலும் புற்றுநோய் வரலாம். ஒரு குறிப்பிட்ட ஒரு புற்றுநோய்க்கான காரணிகள் வெவ்வேறாக இருப்பதற்கான சாத்தியம் இருப்பதனால் அந்த நோய் வந்ததற்கான காரணம் என்ன என்பதை மிக எளிதில் சொல்ல முடியாது. எடுத்துக்காட்டாக புகைப்பிடிக்கும் ஒருவருக்கு நுரையீரல் புற்றுநோய் வந்திருந்தால் அவரது நோய்க்கான புற்றுநோய் காரணி புகையிலையாக இருக்கக்கூடும்.

இருந்தபோதிலும் சுற்றுச்சூழல் மாசு, கதிரியக்க மாசு போன்றவையும் மனிதனின் நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் சாத்தியத்தை கொண்டிருப்பதனால் அவற்றில் ஏதாவது ஒன்று கூட புற்றுநோய்க்கான காரணமாக அமையலாம்.உடல் உறுப்புகள் கொடை, கருத்தரிப்பு போன்ற நிலைகளில் அரிதாக ஒருவரிலிருந்து வேறொருவருக்கு புற்றுநோய் கடத்தப்படுகிறது. என்றாலும் பொதுவாக புற்றுநோய் கடத்தப்படும் நோய் அல்ல. தவிர உலக அளவில் புற்றுநோய்க்கான தொற்றானது 16.1 சதவீதம் அறியப்பட்டுள்ளது தீ நுண்மங்களே.. தொற்றுவதற்கான பொதுவான நோய் காரணிகளாக இருந்த போதிலும் சில பாக்டீரியாக்களும் ஒட்டுண்ணிகளும் கூட நோய்க்காரணியாக இருக்கலாம் என அறியப்படுகிறது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் 80 சதவீதம் கல்லீரல் புற்றுநோய்க்கு காரணியாகவும் 15லிருந்து 20 சதவீதம் ஏனைய புற்று நோய்களுக்கு காரணியாகவும் இருக்கின்றது. இந்த விகிதம் நாட்டுக்கு நாடு வேறுபடும். ஆப்பிரிக்காவில் இந்த விகிதம் 32.7 சதவீதமாகவும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 3.3. சதவீதமாகவும் இருக்கின்றது.

அறிகுறிகள்

புற்றுநோயின் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளும் பலருக்கும் தென்படுவதில்லை. கட்டி தோன்றும் நிலை அல்லது புண்ணாகும் நிலையிலேயே பெரும்பாலும் உணர்குறிகள் மற்றும் அறிகுறிகள் தெரிய வருகிறது.அதன்பிறகுதான் என்ன வகை புற்றுநோய், எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதை பொறுத்து இந்த அறிகுறிகள் மாறுபடும். சில அறிகுறிகள் குறிப்பிடத்தக்கவையாக இருக்கும். ஆனால் பல அறிகுறிகள் வேறு நோய்களிலும் தோன்றக் கூடியவையாக இருக்கும். அதனால் இது வேறுநோய் நிலைகளுடன் தொடர்புபடுத்தி பார்க்கப்படுவதற்கான சாத்திய கூறுகள் உண்டு. புற்றுநோய் என இறுதி ஆ.ய்வு செய்யப்படும்போது மனிதர்கள் அதிக கவலை மற்றும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுகிறார்கள். புற்றுநோயாளிகளில் தற்கொலைக்கான ஆபத்து கிட்டதட்ட இரட்டிப்பாக இருப்பதாக அறியப்படுகிறது.

புற்றுநோய் அறிகுறிகளை மூன்று குழுக்களாக பிரிக்கலாம். முறை பிறழ்ந்த கட்டிகள் அல்லது வீக்கம் இருக்கும் இடத்தை பொறுத்து இவ்வறிகுறிகள் தோன்றும். எடுத்துக்காட்டுகள் நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகள் மூச்சுக்குழல் வழியை அடைப்பதனால் இருமல், நுரையீரல், அலர்ஜி போன்ற அறிகுறிகள் தோன்றலாம். உணவுக்குழாய் புற்றுநோயில் உணவு குழாயை ஒடுக்குவதால் அல்லது குறுகச் செய்வதனால் உணவை விழுங்குவது கடினமாதல் அல்லதுஉணவுக்குழாய் அழற்சி போன்ற அறிகுறிகள் தோன்றும்.பெருங்குடல் மலக்குடலுக்குரிய ஒற்றுமை ஏற்படின் மனித இரையக குடற்பாதையில் ஏற்படும் ஒடுக்கம் குடல் தொடர்பான விஷயங்களில் ஒழுங்கின்மையை காட்டும்.

மார்பக புற்றுநோய், விந்தகப் புற்றுநோயின் கட்டிகள் தெளிவாகத் தெரியும். கட்டிகள் தோன்றும் ஆரம்ப நிலையில் வலி இருப்பதில்லை. ஆனால் நோய் தீவிரமடையும் நிலையில் குறிப்பிட்ட இடத்தில் வலி தோன்றும். கட்டிகள் புண்ணானால் ரத்தக் கசிவு ஏற்படலாம்.நுரையீரல் புற்றுநோய் ஏற்படின் இருமும்போது ரத்தம் வெறியேறும், குடலில் புற்றுநோயெனில் குருதிச் சோகை அல்லது மலவாய் வழியாக ரத்தப் போக்கு ஏற்படலாம்.

சிறுநீர்ப்பை புற்றுநோய் எனில் சிறுநீருடன் ரத்தம் வெளியேறலாம். கருப்பை புற்றுநோய் அல்லது கருப்பைவாய் புற்றுநோய் என்றால் யோனி ஊடாக ரத்தப்பெருக்கு ஏற்படலாம்.இரண்டாவதாக எதிர்பார்க்காத உடல்நிலை குறைவு, காய்ச்சல், பசியின்மை, உடல் மெலிதல், அளவுக்கதிகமான களைப்பு, ரத்தப் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் போன்றவற்றில் தொடர்ந்து விடாமல் இருக்கும் காய்ச்சல்.

மற்றொன்று புற்றுநோயானது தோன்றிய இடத்தில் இருந்து நிணநீர் தொகுதி மூலமாக அருகில் உள்ள நிணநீர் கண்களுக்கு பரவலாம். இதனை தொட்டு உணர முடியும். ரத்த சுற்றோட்ட தொகுதி மூலமாக தூரமாக உள்ள வேறு உறுப்புகளுக்கு பரவலாம். இந்த இரு நிகழ்வுகளும் மாற்றிடும் புகல் எனப்படுகிறது.இதன் விளைவாக கல்லீரல், மண்ணீரல் என்பவற்றில் வீக்கம் தோன்றும். இவ்வாறு கல்லீரல், மண்ணீரல் வீக்கம் அடையும்போது வயிற்றில் இவற்றை உணர முடியும்.இவை தவிர எலும்பு மஜ்ஜைகளுக்கு பரவி இருப்பின் வலி அல்லது எலும்பு உடைவு ஏற்படலாம் அத்துடன் சில நரம்பியல் அறிகுறிகள் தோன்றலாம்.

தொகுப்பு: - ஆர்.ஜெகாதா