Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிக்கலாமா?

நன்றி குங்குமம் தோழி

* காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால், உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றுகிறது. இதுவே வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை பருகினால், மலம் கழிப்பது சீராகி, நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.

* உடலில் மெட்டபாலிசத்தை 25% வரை அதிகரித்து உடல் எடையை குறைக்கிறது. ஜீரண சக்தியை துரிதப்படுத்துகிறது.

* மலக்குடல் சுத்தமாகி மலம் கழித்தலை சீராக்குகிறது. தினமும் காலையில் மலம் கழிக்கும் பழக்கத்தை கொண்டு வருகிறது.

* தண்ணீர் உடலுக்கு மிகவும் முக்கியம். நீர்ச்சத்தை சரியான அளவில் வைக்க உதவுகிறது. உடலை தாக்கும் கிருமிகள் மற்றும் நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது. நோய்களின் தாக்குதல் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ உதவுகிறது.

* உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால் தலைவலியால் அவதிப்பட நேரிடும். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது உடலுக்கு போதுமான நீர்ச்சத்து கிடைத்து தலைவலி வராமல் தடுக்கிறது.

* பசி அதிகரிக்க செய்யும். குடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றி விடுவதால் வயிறு நன்றாக பசிக்கும்.

* அழகான பொலிவான சருமத்தை பெறலாம். கரும்புள்ளிகள், பருக்கள் சருமத்தில் தங்கியுள்ள நச்சுக்களால் ஏற்படுகிறது. தண்ணீர் குடிக்கும் போது நச்சுக்கள் வெளியேற்றப்படுவதால் இது போன்ற சருமப் பிரச்னைகள் நம்மை எட்டிப் பார்ப்பதில்லை.

* உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை நமது குடல் சீக்கிரமாக உறிஞ்சிக் கொள்ள இந்தப் பழக்கம் உதவுகிறது. இதன் மூலம் குடலில் ஏற்படும் கொடிய புற்று நோய் அபாயத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

* ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரித்து ரத்தத்திற்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் செல்கிறது. இதன் மூலம் அந்த நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக உற்சாகமாக செயல்பட முடியும்.

* தண்ணீருக்கு கலோரி கிடையாது. அதை வெறும் வயிற்றில் குடிக்கும் போது எதிர்பார்க்காத வகையில் உடல் எடையை குறைக்க முடியும். நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது கட்டுப்படுத்தப்படும்.தண்ணீர் நமது உடலின் மெட்ட பாலிசத்தை அதிகரித்து கொழுப்புகளை கரைக்கிறது.

* உடலுக்கு மட்டுமல்ல கூந்தலுக்கும் எல்லாவிதமான ஊட்டச் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது. உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால் கூந்தலும் வறண்டு பொலிவில்லாமல் போய்விடும். தினமும் போதுமான தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து ஆரோக்கியத்தை பராமரியுங்கள்.

- கவிதா சரவணன், திருச்சி.