நன்றி குங்குமம் டாக்டர்
2013ல 4வது ஸ்டேஜ் மார்பகப் புற்றுநோய்...6 மாசம்தான் வாழ்வேன்னு சொன்னாங்க...
ஆனா, 2013ல 3வது முறையா நான் அம்மாவானேன்...2026ல மகிழ்ச்சியா குடும்பத்தோட வாழறேன்!
நீங்கள் ஓர் அமைதியான ஊரில் வாழ்கிறீர்கள். திடீரென்று எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் நிலநடுக்கம் வந்தால் எப்படியிருக்கும்? நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாமே நொறுங்கி விழும்போது ஏற்படுகிற அதிர்ச்சி, பயம்... நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்கி நெஞ்சம் பதறுகிறதல்லவா?
இப்படியொரு உடல் நடுக்கம் நம் உடம்பில் திடீரென்று நடந்தால்..?
அப்படியொரு நிலநடுக்கத்தை தன் உடலில் சந்தித்த பெண்தான் இவர். அப்படிஎன்ன நடந்தது?
இதோ அவரே சொல்கிறார்... கேட்போமா?
என் பெயர் அமுதா ரூபீ. சின்ன வயசுல இருந்தே ரொம்ப சுறுசுறுப்பான ஸ்போர்ட்ஸ் பர்சன் நான். எம்ஏ இங்லீஷ் லிட்ரேச்சர் முடித்து, நிதி நிறுவனத்துல மானேஜரா வேலை செய்தபோது திருமணமாச்சு. கணவர் பிரின்ஸ்டன் பால் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர்.அழகான வாழ்க்கை. இரண்டரை வயது, நான்கு வயதுனு மணி மணியா இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தாங்க.இந்தநேரத்துலதான் எதிர்பாராத தருணத்துல என் உடம்புல நிலநடுக்கம் ஏற்பட்டுச்சு.
திடீர்னு ஒருநாள் கையை நகர்த்த முடியல. அவ்வளவு வலி. பரிசோதிச்சப்ப வலது மார்பகத்திலும் அக்குள் பகுதியிலும் இரண்டு கட்டிங்க.ஆமா... 2013ல எனக்கு கேன்சர்னு கண்டுபிடிச்சாங்க. அதுவரைக்கும் சினிமா, சீரியல்கள்ல மட்டுமே கேன்சர் பத்தி பார்த்திருக்கேன். அது எனக்கே வந்தப்ப நிலைகுலைஞ்சு போயிட்டேன். சரியா எங்க அஞ்சாவது திருமண நாள் அப்பதான் ரிசல்ட் வந்தது. கணவரும் நானும் அதிர்ந்துட்டோம். அதுவும் எனக்கிருந்தது மூன்றாம் கட்ட அட்வான்ஸ்டு லெவல் மார்பகப் புற்றுநோய்.
இது டிரிபிள் எக்ஸ் நெகட்டிவ்... உடம்பு முழுக்க பரவிடுச்சு... 6 முதல் 8 மாதங்களே உயிரோடு இருப்பேன்னு எல்லாம் சொன்னாங்க.
அதுவரைக்கும் பெங்களூருல வசிச்ச நாங்க சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தோம்.முதல்நாள் அடையார் கேன்சர் நிறுவனத்துக்குள்ள காலை வைச்சப்ப நிறைய புற்றுநோயாளிகள் எதிர்ப்பட்டாங்க. என்னையும் அறியாம என் கண்ணுல இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. ஒருபோதும் தைரியத்தை இழந்து உருத்தெரியாம போகக்கூடாதுனு அந்தக் கணத்துல முடிவெடுத்தேன்.இந்த இடத்துல இருந்து என் மருத்துவப் போராட்டம் ஆரம்பமாச்சு. அது சாதாரண போராட்டமே இல்ல. கிட்டத்தட்ட 4வது ஸ்டேஜ் என்ற நிலைல, 21 நாளைக்கு ஒருமுறைனு 18 கீமோதெரபி, 25 ரேடியேஷன், 3 சர்ஜரினு வாழ்க்கை போர்க்களமாச்சு.
நரகம் இருக்கறது உண்மையானு தெரியாது. ஆனா, நான் என் ஒவ்வொரு அணுவிலும் அனுபவிச்சேன். பென்சில் வைச்சு வரைஞ்ச புருவத்தோடும் மொட்டைத் தலைல ஸ்கார்ப் கட்டியபடியும் கண்ணாடி முன்னாடி நின்னு அழுவேன். அந்தச் சூழல்லயும் ‘நீதான் என் ஏஞ்சல்’னு என் புருஷன் அணைச்சு சொல்வார். அந்த அணைப்பும் மனசார அவர் சொன்ன ‘ஏஞ்ச’லும் எனக்குக் கொடுத்த தைரியத்தை எப்படி உங்களுக்கு விளக்கறதுனு தெரியலை.
எனக்கு நோய் இருக்குனு டாக்டர் சொன்னதை நான் ஏத்துக்கலை. ஏன்னா, நோயாளியா இருக்க மட்டுமில்ல... அப்படி நினைக்கவே நான் விரும்பலை.குடும்பத்தோடு நீண்ட காலம் வாழணும் என்ற நினைப்புதான் என் நாடி நரம்பெல்லாம் பாஞ்சது. என் பிள்ளைகளுக்கு என்னைவிட பெஸ்ட் அம்மாவா யாரால இருக்க முடியும்? தங்களோட பெஸ்ட் அம்மாவை அவங்க இழக்கவே கூடாதுனு உறுதியா நின்னேன்.
விளைவு என்ன தெரியுமா? எப்பவும் சிரிச்ச முகத்தோட சிரிக்கச் சிரிக்க பேசிகிட்டு இருப்பேன். நெகடிவ்வா பேசவே மாட்டேன். என்னைப் பார்த்தா கேன்சர் நோயாளினு சொல்லவே முடியாது. உடம்புலதான் அறிகுறி தெரியும். ஆனா, என் நடத்தை, பேச்சு எல்லாம் பார்க்கறவங்களுக்கு எனர்ஜியைக் கொடுக்கும். நம்ம உடலோட ஒவ்வொரு செல்லிலும் மைட்டோகாண்ட்ரியா இருக்கு. செல்ஸ் மெமரைனும் இருக்கு. மரபு ரீதியா பல்வேறு விஷயங்க நம் செல்கள்ல சேகரமாகும்.
நம்ம உடம்பு எதைக் கவனிக்குதோ அதையே செல்களும் கவனிக்கும். நம்ம உடம்புல நாம எதைச் செய்தாலும் நமது செல்களுக்கு சிக்னல் போகும். நம்ம சப்கான்ஷியஸ் மைண்ட் பவர் இதுல மேஜர் ரோல் பண்ணும்.இந்த அறிவியல் உண்மையை உணர ஆரம்பிச்சேன். அதனால கேன்சர் என்கிற வார்த்தையை உச்சரிக்கவே மாட்டேன்.கான்ஷியஸ் மைண்ட்ல எனக்கு நோய் இருக்கு. ஆனா, சப்கான்ஷியஸ் மைண்ட்ல எனக்கு நோய்இல்லை. நான் ஸ்ட்ராங்கா இருக்கேன்... ஹெல்த்தியா இருக்கேன்... ஹேப்பியா இருக்கேன்னு நம்பினேன். அந்த நம்பிக்கைதான் இந்த 2026லும் என்னை வாழவைக்குது.
நம்ம சிந்தனைகளை நமது உடல் மதிக்குது. இது சயின்ஸ் ரீதியா நிரூபிக்கப்பட்ட விஷயம். அதனாலதான் எண்ணங்கள் உயர்வா, வலிமையா இருக்கணும்னு சொல்றாங்க. இதுதான் சோர்ந்துபோன நம்ம உடம்போட செல்களை ஊக்கப்படுத்தி ஆக்டிவேட் பண்ணுது.இதுக்கு வாழும் எடுத்துக்காட்டு நான்தான். 6 மாசத்துல என் வாழ்க்கை முடிஞ்சுடும்னு 2013ல டாக்டர்ஸ் சொன்னாங்க. இப்ப 2026லும் குடும்பத்தோடு மகிழ்ச்சியா நான் வாழ்ந்துட்டு இருக்கேன்.
ஆமா... 3வது ஸ்டேஜ் கேன்சர் என்னைப் பார்த்து பயந்து ஓடிடுச்சு!
2013 முதல் 2016 வரை நோயோடு பயணம் செய்தேன். நோய் குணமானதும் எம்எஸ்ஸி கவுன்சிலிங் அண்ட் சைக்கோ தெரப்பி முடிச்சு, டிப்ளமோவில் லேபர் லாவும் முடிச்சேன். இதெல்லாம் போதாம ஏகப்பட்ட சர்டிஃபிகேட் கோர்ஸ்கள் முடிச்சேன்.நம்புங்க. மூன்றாவது முறையா 2018ல நான் அம்மாவானேன். செத்துப்போயிடுவேன்னு சொன்ன என் உடம்புல இருந்து ஓர் உயிருக்கு ஜனனம் கொடுத்தேன்.
கேன்சர்ல இருந்து வெளில வந்துட்டேன்னு நான் சொல்றதுக்கும் இந்த மாதிரியான ஒரு அம்மாவுக்கு, ‘மிராக்கிளா நான் பிறந்தேன்’னு என் மக சொல்வதற்கும் தொடர்பிருக்கு இல்லையா..?
அதனாலயே அவளுக்கு நானும் என் கணவரும் சேர்ந்து ‘மிரா’னு பெயர் வைச்சிருக்கோம். அதோடு நாங்க தொடங்கியிருக்கும் அமைப்புக்கும் ‘மிரா ஃபவுண்டேசன்’னுதான் பேரு.எனக்கு நடந்த மிராக்கிள் என்னை மாதிரி பாதிக்கப்பட்ட எல்லாருக்கும் ஏற்படணும். அதுக்காகதான் இந்த தொண்டு நிறுவனத்தை தொடங்கி
யிருக்கோம்.
இதுகூடவே ‘அமுதா லைஃப் கோச்சிங் அகடமி’யும் நடத்திட்டு இருக்கேன். கேன்சர்ல இருந்து நான் மீண்டது... மீண்டும் தாய்மை அடைந்தது... மகிழ்ச்சியா வாழறது... இதெல்லாமே கேன்சரால பாதிக்கப்பட்டவங்களுக்கும் நம்பிக்கை கொடுக்கும்னு உறுதியா நம்பறேன். ‘அமுதா லைஃப் கோச் அகடமி’ வழியா ஹீலிங் டெக்னிக்ஸ், விஷுவலைசேஷன் பவர், அஃபர்மேஷன்ஸ்... இதெல்லாம் நோயாளிக்கு எப்படி சப்போர்ட் செய்யும் என்பதையும் கற்றுத் தர்றேன்.
வாழ்க்கைக்கு ஹெல்த், வெல்த், ரிலேஷன்ஷிப், கரியர்னு நான்கும் மிக முக்கியம். ஹெல்த் என்கிற ஒரு விஷயம் இதுல அடிவாங்கினா, மீதியுள்ள மூன்றுமே அடிவாங்கும். அதனால நோய் பாதிப்பு நேரத்துல பொருளாதார ரீதியா என்னென்ன தவறை செய்யக் கூடாது... ரிலேஷன்ஷிப்புக்கும் பணத்துக்கும் உள்ள தொடர்பு... நோய் காரணமா செலவான பணத்தை எப்படி திரும்ப சம்பாதிக்கலாம்னு எல்லாம் மைண்ட் செட் கோச்சா கற்றுத் தர்றேன். நிலநடுக்கம் வர்றதை நம்மால தடுக்க முடியாதுதான். ஆனா, அந்த இடிபாடுகள்ல இருந்து எழுந்து, உறுதியான அழகான புது வீட்டைக் கட்டலாம் இல்லையா..? அதை எப்படிக் கட்டுகிறோம் என்பது நம்ம கைகள்லதானே இருக்கு?
பயப்படாதீங்க... உலகத்துலயே புயலை எதிர்த்து நிற்கும் ஒரே விலங்கு எது தெரியுமா? பைசன்தான். சிங்கம், புலி கூட புயல் வர்றப்ப அதனை நோக்கி ஓடாது. எதிர்த் திசைலதான் ஓடும்.
காளமாடன் மட்டும்தான் தைரியமா புயலை நோக்கி ஓடும். புயலையும் கடக்கும்.கேன்சரால பாதிக்கப்பட்டவங்க பைசனா மாறணும்!
தொகுப்பு: - மகேஸ்வரி நாகராஜன்
படம் - ஆ.வின்சென்ட் பால்


