Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட

நன்றி குங்குமம் டாக்டர்

பதற்றம், கோபம், கவலை, யோசனை போன்ற சூழல்களில் நம்மை அறியாமலே நகம் கடிக்கும் பழக்கம் வந்துவிடுகிறது. இதற்கு காரணம் ஆனிசோபேஜியா (Onychophagia) எனக் குறிப்பிடுகிறது மருத்துவம். இந்த நகம் கடிக்கும் பழக்கம் என்ன மாதிரியான தீங்குகளை விளைவிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

நகங்களை கடிக்கும்போது, அதிலுள்ள அழுக்குகள் வாய் வழியாக உடலுக்குள் சென்று நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும். அதன் சதைப் பகுதியை கடித்துவிட்டால் விரல்களில் வீக்கம் ஏற்பட்டு, சீழ்ப்பிடிக்கும் அபாயமும் உண்டு.

நகங்களை கடிக்கும்போது அதிலிருக்கும் துகள்கள் ஈறுகளுக்குள் சென்றடைந்து பல் வலி, வீக்கம், வயிறு வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

குழந்தைக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறதென்றால், பல் வளர்வதில் சிக்கல் ஏற்படும். ‘தொடர்ந்து நகம் கடிப்பது, Obsessive-compulsive disorder (OCD) எனப்படும் எண்ண சுழற்சி நோயின் அறிகுறியாக இருக்கும்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சில எளிய வழிகள்...

நகம் கடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு நெயில் பாலிஷ் உபயோகிக்கலாம். அதில் டெனாடோனியம் பென்சோயேட் எனும் ரசாயனம் கலந்திருக்கிறது. அது கசப்பு தன்மை கொண்டது. அது நகம் கடிக்கும் எண்ணத்தை கட்டுப்படுத்த வழி வகுக்கும்.

பிடித்தமான பொருளை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். நகம் கடிக்க தோன்றும்போதெல்லாம் அந்த பொருளை கையில் வைத்து ரசிக்கலாம்.

நகங்களை அவ்வப்போது வெட்டி, கடிக்க முடியாத அளவுக்கு சிறியதாக, அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்.

வேப்பெண்ணெய் போன்ற கசப்பான சுவையுள்ள ஏதாவதொன்றை நகத்தில் தடவி விடலாம். இதனால், நகம் கடிக்கும்போதெல்லாம் கசப்புணர்ச்சி உண்டாகி, நகத்தின் மீதான கவனம் குறைந்துவிடும்.