Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

எலும்பு புற்றுநோய் A to Z

நன்றி குங்குமம் டாக்டர்

எலும்புப் புற்றுநோய் என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரையும் பாதிக்கும் அரிய வகை புற்றுநோயாகும்.இது முதன்மையானதாகவோ அல்லது மெட்டாஸ் டேட்டிக் ஆகவோ உடலில் வேறு எந்த பகுதியிலும் உள்ள புற்று நோயிலிருந்து எலும்புகளுக்குப் பரவும். எலும்புப் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் சோதனைகள் குறைவாக இருந்தாலும் கீமோதெரபி கதிர்வீச்சு மற்றும் அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் மூலம் குணப்படுத்தப்படுகின்றன.எலும்பு புற்றுநோய்களில் சில வகைகள் இருந்தாலும் அனைத்து எலும்பு புற்றுநோய்களும் இரண்டு துணைகளில் ஒன்றில் அடங்கும்.

முதன்மை எலும்புப்புற்றுநோய் எலும்பில் தொடங்கும் புற்றுநோய். இரண்டாம் நிலை எலும்புப் புற்றுநோய் உடலின் மற்றொரு பகுதியில் தொடங்கி எலும்புக்கு பரவும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்டுக்கு சுமார் 3900 புதிய எலும்பு புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாக புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன. சிலவகையான எலும்பு புற்றுநோய்கள் பெரியவர்களை விட குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகின்றன. மற்ற வகை புற்றுநோய்களை விட எலும்பு புற்றுநோய் குறைவாகவே காணப்படுகிறது.

புற்றுநோய் செல்கள் அதிகமாக பிரியும்போது தேவைக்கு அதிகமாக உடலானது செல்களை குவிக்கிறது. இந்த செல்கள் ஒரு வீரியமிக்க அல்லது புற்றுநோய் கட்டி எனப்படும்., எலும்பு புற்றுநோயக்கு மரபணு மாற்றங்கள் பெரும்பாலும் காரணமாகின்றன. ஏனெனில் அவை புற்றுநோய் செல்களை வளர்க்கின்றன. ஆனால், அவற்றுக்கு என்ன காரணம் என்பதை ஆய்வாளர்களால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. மார்பகம், நுரையீரல், புரோஸ்டேட், சிறுநீரகம் அல்லது தைராய்டு புற்றுநோயின் வரலாறு எலும்பு புற்றுநோயை வளர்ப்பதோடு தொடர்புடையதாக உள்ளன.

தவிர நாள்பட்ட தொற்று நோய், எலும்பில் ஏற்பட்ட காயம், எலும்பு புற்றுநோயின் குடும்ப வரலாறு ஆகியனவும் ஆபத்து காரணிகளாக உள்ளன. எனவே எலும்பு புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது சிறந்த பலன்களுக்கு வழிவகுக்கும். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் எலும்பு புற்றுநோய் வளர்ந்து பரவக்கூடும். பெரும்பாலும் நுரையீரலுக்கு பரவும் என்கிறார்கள் மருத்துவர்கள். எலும்புப் புற்றுநோயின் மிகவும் பொதுவான அறிகுறி பாதிக்கப்பட்ட எலும்பில் மந்தமான வலியானது இரவில் அல்லது எலும்பை அசைக்கும்போது மோசம் அடையக்கூடும். புற்றுநோய் காலப்போக்கில் வளரும்போது வலி தொடர்ந்து இருக்கும்.

ஓய்வாக இருக்கும்போது வலி, கட்டி இருக்கும் இடத்தில் வீக்கம், ஆழமான எலும்புவலி, எலும்பு முறிவுகள் ஆகியவை யெல்லாம் எலும்புப் புற்றுநோயின் பிற பொதுவான அறிகுறிகள். இந்த எலும்புப் புற்றுநோயின் அறிகுறிகள் கட்டியின் அளவு மற்றும் இடத்தை பொறுத்தது.எடுத்துக்காட்டாக எலும்புக் கட்டிகள் முதுகெலும்பில் ஏற்பட்டால் மரத்துப்போதல் அல்லது கூச்ச உணர்வுக்கு வழிவகுக்கும். தளர்வாக மாற்றும். மட்டுமல்ல இந்தப் புற்றுநோய் உடல் எடையைக் குறைத்து அதிக சோர்வை உணர வைக்கும்.

இந்த அறிகுறியில் ஏதேனும் ஒன்றை ஒருவர் நீண்ட காலமாக எந்தக் காரணமும் இல்லாமல் அனுபவித்தால் அவர் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.உடல் பரிசோதனை செய்து, அறிகுறிகளை கேட்டபிறகு எலும்புக் கட்டி இருப்பதாக மருத்துவர் சந்தேகிக்கலாம். ஆனால், மற்ற நோய்கள் மற்றும் தொற்றுகள் எலும்புப் புற்றுநோயை போலவே தோன்றலாம்.உடலின் உட்புறத்தை குறிப்பாக எலும்புகளை படம் எடுக்க கதிர்வீச்சை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் தேவைப்படும் ஒரே சோதனை எக்ஸ்ரே மட்டுமே.எலும்பு ஸ்கேன் ரத்தஓட்டத்தில் ஒரு சிறிய அளவு கதிரியக்கப் பொருளை செலுத்துவதை உள்ளடக்கியது. இது எலும்புத் திசுக்களால் உறிஞ்சப்படுகிறது. உடலில் உள்ளே உள்ள கட்டமைப்புகளில் படங்களை பதிவுசெய்ய காந்த அலைகளை பயன்படுத்துகிறது.

எம்ஆர்ஐ ஸ்கேனிங் சில நேரங்களில் மென்மையான திசுக் கட்டிகளின் துல்லியமான புற்றுநோய் செல்களை சோதிக்க திசுக்களின் மாதிரியை எடுத்துக்கொள்வதை உள்ளடக்கியது. மருத்துவர்கள் பயாப்ஸி என்ற இந்த எளிய முறைகளை உள்ளூர் மயக்க மருந்து கொண்டு செய்கிறார்கள். மேலும் முடிந்தால் குறைந்தபட்ச ஊடுருவும் பயாப்சி நுட்பங்களை தேர்வு செய்கிறார்கள். இதன் பிறகு பெரும்பாலான மக்கள் அதே நாளில் வீட்டிற்கு செல்லலாம்.

எலும்புப் புற்றுநோய்க்கான சிகிச்சை எப்போதும் அறுவை சிகிச்சையை குறிக்காது. மருத்துவர் எலும்புப் புற்றுநோயை கண்டறிந்தவுடன் எவ்வளவு பரவி உள்ளது என்பதை கண்டறிய பல சோதனைகளை நடத்துகிறார். பின்னர் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் எலும்புப் புற்றுநோயின் அடிப்படையில் ஒரு தனிப்பெரும் சிகிச்சை திட்டத்தை உருவாக்குகிறார்.கதிர்வீச்சு சிகிச்சையானது கட்டிகளை சுருக்கி புற்றுநோய் செல்களை கொல்லும். இது அறுவை சிகிச்சைக்கு முன்பு அல்லது அதற்கு பின்னரும் கூட நிகழலாம்.

புற்றுநோய் செல்களை கொல்ல மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மருந்து மாத்திரைகள் அல்லது ஊசிகள் ரத்த ஓட்டத்தில் நுழைந்து உடல் முழுவதும் பயணித்து பெரும்பாலும் புற்றுநோய் செல்களை கொல்லும்.அதே நேரம், சில ஆரோக்கியமான செல்களையும் இது கொல்லும். கீமோதெரபி உடலில் எங்குமுள்ள புற்றுநோய் செல்களைக் கொல்லும். எனவே புற்றுநோய் பரவி யிருக்கும்போது மருத்துவர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

கீமோதெரபி மருந்துகள் சில எலும்புப் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படுகின்றன. எனவே, மருத்துவர்கள் மற்ற வகை போல எலும்புப்புற்றுநோய்களுக்கு இதை பயன்படுத்துவதில்லை.

அவர்கள் முதலில் மற்ற மருந்துகளை முயற்சிக்கலாம். வாந்தி, பசியின்மை, முடி உதிர்தல் மற்றும் வாய்ப்புண்கள் போன்ற குறுகிய காலப் பக்கவிளைவுகள் இதனால் ஏற்படலாம். எலும்பு புற்றுநோய் அறுவைசிகிச்சை என்பது புற்றுநோயின் ஒவ்வொரு துண்டையும் அகற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டது. இதனால்தான் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கட்டியையும், கட்டியைச் சுற்றி உள்ள சில சாதாரண திசுக்களையும் வெளியே எடுக்கிறார்கள்.

கதிர்வீச்சு அல்லது திசுக்களை சேர்ப்பது என்ற சிகிச்சையானது துண்டிக்க வேண்டிய அவசியத்தை தவிர்க்கவும் புற்றுநோய் மீண்டும் வருவதையோ அல்லது பரவுவதையோ தடுக்கவும் பயன்படுகிறது. ஆனால், சிலருக்கு பாதிக்கப்பட்ட எலும்பானது துண்டிக்கப்படுவதே சிறந்த தேர்வாக அமையும்.எலும்புப் புற்றுநோய்க்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு இரண்டும் தேவைப்படுகின்றன. புற்றுநோய் நிலைகள் உடலில் எவ்வளவு புற்றுநோய் உள்ளது என்பதை விவரிக்கின்றன.

சரியான சிகிச்சைத் திட்டத்தை மருத்துவர்கள் கண்டுபிடிக்க இவை உதவுகின்றன. இதனை வைத்து புற்றுநோய் எந்த நிலையில் உள்ளது... புற்றுநோய் வளர்ந்து பரவுவதற்கான வாய்ப்பு எவ்வளவு... என்பதை மருத்துவர்கள் ஆராய்கின்றனர்.கட்டி, எலும்பில் தங்கி உள்ளதா அல்லது அருகில் உள்ள பிற உறுப்புகளுக்கு பரவியுள்ளதா என்பதை ஆராயும் மருத்துவர்கள், இந்தத் தகவல்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு எலும்புப் புற்றுநோயை ஒன்று முதல் மூன்று கட்டமாக பிரிக்கின்றனர்.உடலின் ஒரு பகுதியில் இருந்து பரவ வாய்ப்பில்லாத கட்டிகள் நிலை ஒன்று என்றழைக்கப்படும்.

உடலின் ஒரு பகுதியிலிருந்து பரவ வாய்ப்புள்ள கட்டிகள் நிலை இரண்டாம் நிலையாகும். பரவி உள்ள கட்டிகள் நிலை மூன்றாகும்.எலும்புப் புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டிய தெளிவான நடவடிக்கைகள், அதற்கான காரணங்கள் குறித்து முடிவெடுக்க மருத்துவர்க்கு போதுமான அவகாசம் வேண்டும்.

மரபியல் அல்லது வயதை கட்டுப்படுத்த முடியாது. அதேபோல் எலும்பு புற்றுநோய் ஏற்பட வாழ்க்கை முறை காரணமாக அமைவதற்கும் இதுவரை எந்த ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை.

மென்மையான திசுகட்டிகள் தசைகள் கொழுப்பு மற்றும் இணைப்பு த்சைகளில் ஏற்படுகின்றன. மென்மையானதிசுக்கட்டிகள் லிப்போமா அல்லது கொழுப்புக்கட்டி போன்ற தீங்கற்ற விஷயங்களில் இருந்து ஆபத்தான நோய்கள் வரை இருக்கலாம்.

தீங்கற்ற புற்றுநோயற்ற லிப்போமா கட்டிகளுக்கு பெரும்பாலும் சிகிச்சை தேவையில்லை. இந்தக் கட்டிகள் தொடை, பிட்டம், வயிறு, மார்பகம் என உடல் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். மென்மையான இந்தத் திசுக் கட்டிகள் காலப்போக்கில் வளரலாம் அல்லது வளராமல் இருக்கலாம். ஆனால், அவை மிகவும் பொதுவானவை. அதேசமயம் அவற்றை அகற்ற அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். ஆனால், மாதங்கள் அல்லது வருட கணக்கில் மாறாமல் இருக்கும் இந்தக் கட்டிகள் புற்றுநோய் அல்ல என்று அர்த்தமல்ல. அதனால், அவ்வப்போது சோதித்துக் கொள்ளவேண்டும்.

தொகுப்பு: - ஜெகாதா