Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சோயாபீன்ஸின் நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

சோயாபீன்ஸ் உலகம் முழுவதும் பரவலாக உட்கொள்ளப்படுகிற ஒரு சத்தான உணவுப்பொருள். சோயாபீன்ஸ் எண்ணற்ற ஆரோக்கிய நன்மையை, கொண்டுள்ளது. இதில் புரதம், நார்ச்சத்து வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளன என்கிறார் உணவியல் நிபுணர் சங்கீதா. சோயாபீன் நன்மைகள் குறித்து அவர் மேலும் பகிர்ந்து கொண்டவை:

சோயாபீன் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் முதன்முதலில் பயிரிடப்பட்டது.

சோயாபீன் புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். உயிரியல் ரீதியாகச் செயல்படும் இத்தகைய பல சேர்மங்கள் இருப்பதால், மருந்துத் துறையில் மருந்துகள் மற்றும் பிற உணவுப் பொருட்களைத் தயாரிக்கவும் சோயாபீன் பயன்படுத்தப்படுகிறது. சோயாபீன் ஒரு முக்கிய எண்ணெய் வித்துப்பயிராகவும் பயிரிடப்படுகிறது. சோயாபீனின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

சோயாபீன்ஸின் தாவரவியல் பெயர்: கிளைசின்மேக்ஸ் குடும்பம்: பஃபாசியே குடும்பத்தை சார்ந்தது.பொதுவான பெயர்கள்: சோயாபீன், சோயா சோயாபீன்களின் மேல் தோல் உண்ணத்தகுந்தது அல்ல, எனவே, உள்ளே இருக்கும் பீன்களை எடுப்பதற்காக, அவை அரிக்கப்பட்டு பின்பு

பயன்படுத்தப்படும்.

யு.எஸ். டி. அ (U.S.D.A) தேசிய ஊட்டச்சத்து தகவல்படி 100 கிராம் சோயாவின் ஊட்டச்சத்து அளவு:

ஆற்றல் - 147 கி. கலோரி

புரதம் - 12.95 கிராம்

கார்போஹைட்ரேட் - 11.05 கிராம்

இரும்புச்சத்து - 3.55 கிராம்

நார்ச்சத்து - 4.2 கிராம்

புரதச்சத்து நிறைந்தது.

சோயாபீன்ஸ் தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த மூலமாகும். சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். ஏனெனில் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும் அத்தியாவசிய அமினோ-அமிலங்கள் சோயாவிலும் நிறைந்து உள்ளன. புரதம் தசைகளின் வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளுக்கு இன்றியமையாதது. உடற்பயிற்சிக்குப் பிறகு தசைகளை மீட்டுடெடுக்க சோயாபீன்ஸ் உதவுகிறது.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

சோயாபீன்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமான அமைப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது. குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது

கால்சியம் மற்றும் ஐசோஃப்ளேவோன் நிறைந்துள்ளன. கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், வலிமைக்கும் முக்கியமானது. ஐசோஃப்ளேவோன், ஈஸ்ட்ரோஜன் போன்ற பண்பு களைக் கொண்டுள்ளன. இவை எலும்பு இழப்பைத் தடுக்க உதவுகின்றன. குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புப்புரை நோய் ஏற்படும் அபாயம் அதிகம்.சோயாபீன்ஸ் உட்கொள்வது .இந்த அபாயத்தை குறைக்க உதவும்

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

சோயாவில் உள்ள ஐசோஃப்ளேவோன் மற்றும் நார்ச்சத்து கெட்ட கொழுப்பு (எல்டிஎல் அளவைக் குறைக்க உதவுகின்றன. மேலும் இதில் உள்ள ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் (ஓமேகா -3 - ஃபேட்டி ஆசிட்) இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது

சோயாபீன்ஸில் உள்ள ஈஸ்ட்ரோஜன் உடலில் ஹார்மோன் சமநிலையை உண்டாக்குகிறது. குறிப்பாக மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான அசெளகரியங்

களைக் குறைக்க சோயாபீன்ஸ் உதவுகிறது.

உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது

புரதம் மற்றும் நார்ச்சத்து இரண்டும் நிறைந்துள்ளதால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. இதனால் அதிகமாக உணவு உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது.பல்துறை பயன்பாடு மற்றும் சுவை சோயாபீன்ஸ் பல வடிவங்களில் உட்கொள்ளலாம். டோஃபூ, சோயா பால், சோயா சங்க்ஸ் போன்றவை பிரபலமான சோயா பொருட்கள் இவற்றை பல்வேறு உணவுகளுடன் சேர்த்து சமைக்கலாம் சோயாபீன்ஸ் சுவையானது மற்றும் பலவிதமான உணவு வகைகளுக்கு ஏற்றது.

சமீபத்திய ஆராய்ச்சியில் மார்பகப் புற்றுநோயைக் கொண்ட 6000த்துக்கும் மேற்பட்ட பெண்களிடையே நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில், ஐசோஃபுளோவோன்கள் நிறைந்த சோயா உணவுகளை உட்கொள்வது, இந்த நோயின் காரணமாக இறப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றது என்று வெளிப்படுத்தியது. தேவையான அளவில் சோயாபீன்ஸ் எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்.சோயாபீன்ஸில் உள்ள ஐசோஃப்ளேவோன்களுக்கு மனச்சோர்வு எதிர்ப்புப் பண்புகள் கொண்டுள்ளது. இதனால் மனச்சோர்வைக் கட்டுப்படுத்துவதில் சோயாபீன்ஸ் சிறந்து விளங்குகிறது.

*சோயாபீன்ஸ் உலகம் முழுவதும் பரவலாக உட்கொள்ளப்படுகிற ஒரு சத்தான உணவுப்பொருள். சோயாபீன்ஸ் எண்ணற்ற ஆரோக்கிய நன்மையை, கொண்டுள்ளது. இதில் புரதம், நார்ச்சத்து வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளன என்கிறார் உணவியல் நிபுணர் சங்கீதா.

சோயாபீன் நன்மைகள் குறித்து அவர் மேலும் பகிர்ந்து கொண்டவை:

சோயாபீன் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் முதன்முதலில் பயிரிடப்பட்டது. சோயாபீன் புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். உயிரியல் ரீதியாகச் செயல்படும் இத்தகைய பல சேர்மங்கள் இருப்பதால், மருந்துத் துறையில் மருந்துகள் மற்றும் பிற உணவுப் பொருட்களைத் தயாரிக்கவும் சோயாபீன் பயன்படுத்தப்படுகிறது. சோயாபீன் ஒரு முக்கிய எண்ணெய் வித்துப்பயிராகவும் பயிரிடப்படுகிறது. சோயாபீனின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

சோயாபீன்ஸின் தாவரவியல் பெயர்: கிளைசின்மேக்ஸ்

குடும்பம்: பஃபாசியே குடும்பத்தை சார்ந்தது.பொதுவான பெயர்கள்: சோயாபீன், சோயா சோயாபீன்களின் மேல் தோல் உண்ணத்தகுந்தது அல்ல, எனவே, உள்ளே இருக்கும் பீன்களை எடுப்பதற்காக, அவை அரிக்கப்பட்டு பின்பு பயன்படுத்தப்படும்.

யு.எஸ். டி. அ (U.S.D.A) தேசிய ஊட்டச்சத்து தகவல்படி 100 கிராம் சோயாவின் ஊட்டச்சத்து அளவு:

ஆற்றல் - 147 கி. கலோரி

புரதம் - 12.95 கிராம்

கார்போஹைட்ரேட் - 11.05 கிராம்

இரும்புச்சத்து - 3.55 கிராம்

நார்ச்சத்து - 4.2 கிராம்

புரதச்சத்து நிறைந்தது.

சோயாபீன்ஸ் தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த மூலமாகும். சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். ஏனெனில் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும் அத்தியாவசிய அமினோ-அமிலங்கள் சோயாவிலும் நிறைந்து உள்ளன. புரதம் தசைகளின் வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளுக்கு இன்றியமையாதது. உடற்பயிற்சிக்குப் பிறகு தசைகளை மீட்டுடெடுக்க சோயாபீன்ஸ் உதவுகிறது.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

சோயாபீன்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமான அமைப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது. குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது

கால்சியம் மற்றும் ஐசோஃப்ளேவோன் நிறைந்துள்ளன. கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், வலிமைக்கும் முக்கியமானது. ஐசோஃப்ளேவோன், ஈஸ்ட்ரோஜன் போன்ற பண்பு களைக் கொண்டுள்ளன. இவை எலும்பு இழப்பைத் தடுக்க உதவுகின்றன. குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புப்புரை நோய் ஏற்படும் அபாயம் அதிகம். சோயாபீன்ஸ் உட்கொள்வது. இந்த அபாயத்தை குறைக்க உதவும்

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

சோயாவில் உள்ள ஐசோஃப்ளேவோன் மற்றும் நார்ச்சத்து கெட்ட கொழுப்பு (எல்டிஎல் அளவைக் குறைக்க உதவுகின்றன. மேலும் இதில் உள்ள ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் (ஓமேகா -3 - ஃபேட்டி ஆசிட்) இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது

சோயாபீன்ஸில் உள்ள ஈஸ்ட்ரோஜன் உடலில் ஹார்மோன் சமநிலையை உண்டாக்குகிறது. குறிப்பாக மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான அசெளகரியங்

களைக் குறைக்க சோயாபீன்ஸ் உதவுகிறது.

உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது

புரதம் மற்றும் நார்ச்சத்து இரண்டும் நிறைந்துள்ளதால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. இதனால் அதிகமாக உணவு உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது.

பல்துறை பயன்பாடு மற்றும் சுவை

சோயாபீன்ஸ் பல வடிவங்களில் உட்கொள்ளலாம். டோஃபூ, சோயா பால், சோயா சங்க்ஸ் போன்றவை பிரபலமான சோயா பொருட்கள் இவற்றை பல்வேறு உணவுகளுடன் சேர்த்து சமைக்கலாம் சோயாபீன்ஸ் சுவையானது மற்றும் பலவிதமான உணவு வகைகளுக்கு ஏற்றது.சமீபத்திய ஆராய்ச்சியில் மார்பகப் புற்றுநோயைக் கொண்ட 6000த்துக்கும் மேற்பட்ட பெண்களிடையே நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில், ஐசோஃபுளோவோன்கள் நிறைந்த சோயா உணவுகளை உட்கொள்வது, இந்த நோயின் காரணமாக இறப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றது என்று வெளிப்படுத்தியது.

தேவையான அளவில் சோயாபீன்ஸ் எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்.சோயாபீன்ஸில் உள்ள ஐசோஃப்ளேவோன்களுக்கு மனச்சோர்வு எதிர்ப்புப் பண்புகள் கொண்டுள்ளது. இதனால் மனச்சோர்வைக் கட்டுப்படுத்துவதில் சோயாபீன்ஸ் சிறந்து விளங்குகிறது.

தொகுப்பு: உணவியல் நிபுணர் சங்கீதா