Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நன்னாரியின் பயன்கள்!

நன்றி குங்குமம் தோழி

* நன்னாரி வேர் உடல் உஷ்ணத்தைத் தணித்து, ரத்தத்தைச் சுத்திகரித்து உடலுக்கு குளிர்ச்சி மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் மிகச் சிறந்த மருத்துவ மூலிகையாகும். இது கோடைக் காலத்தில் தாகத்தை தணித்து, சிறுநீர் பெருக்கியாகவும், நச்சுக்களை வெளியேற்றவும், செரிமானத்தை மேம்படுத்தவும், மூட்டு வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.

* நன்னாரி சர்பத் உடல் வெப்பத்தை உடனடியாக குறைத்து, கோடைக்கால நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும்.

* உடலின் நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை தூய்மைப்படுத்தி, தோலுக்கு பொலிவு தருகிறது.

* சிறுநீர் எரிச்சல், சிறுநீர் பாதை தொற்று போன்ற பிரச்னைகளை நீக்கி, சிறுநீர் நன்றாக பிரிய உதவுகிறது.

* வயிற்றுப் போக்கு, வயிற்று எரிச்சல் மற்றும் செரிமானக் கோளாறுகளை குறைக்க உதவுகிறது.

* பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி, வயிற்று வலி மற்றும் கருப்பை தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது.

* நன்னாரி வேரை நன்கு கழுவி காய வைத்து, பொடி செய்து தேன் அல்லது தண்ணீருடன் கலந்து பருகலாம். பொதுவாக வேரை தண்ணீரில் ஊறவைத்து அல்லது காய்ச்சி பனை வெல்லம் சேர்த்து நன்னாரி சர்பத் ஆக பருகலாம்.

* இருமல், காய்ச்சல், தொண்டைப்புண் போன்ற அறிகுறிகளை நன்னாரி கட்டுப்படுத்துகிறது.

* கல்லீரலில் உண்டாகும் பாதிப்புகளை தடுக்கிறது.

* குழந்தைகளுக்கு பசியின்மை பிரச்னை வந்தால் இந்த பானம் செரிமானத்தை மேம்படுத்தி பசியுணர்வை அதிகரிக்கும்.

* நன்னாரி இருந்தால் போதும், கோடைக் காலத்தை குளிர்ச்சியாக கடந்துவிடலாம்.

தொகுப்பு: அபர்ணா சுப்ரமணியம், சென்னை