Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கடுகு எண்ணெயின் பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

பொதுவாக தமிழர்களை பொருத்தவரை கடுகை உணவு சமைக்கும்போது தாளிப்பதற்காக மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். ஆனால், கடுகிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயில் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. இதனாலேயே வட இந்தியர்களின் சமையலில் கடுகு எண்ணெய் பெரும் பங்கு வகிக்கிறது.

கடுகு எண்ணெய் (Mustard Oil) இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், மற்றும் மூட்டு வலியைக் குறைக்கவும் உதவுகிறது. இதில் நல்ல கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது தலைமுடி வளர்ச்சிக்கும் சருமப் பாதுகாப்புக்கும் பெரிதும் பயன்படுகிறது.

கடுகு எண்ணெயின் மருத்துவ குணங்கள்

கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.

கடுகு எண்ணெய் சுவாச பிரச்சனைகளான ஆஸ்துமா, சளி, இருமல் நீங்குவதற்கு உதவுகிறது.

கடுகு எண்ணெய் குளிர்ச்சித் தன்மை அற்றது. எனவே, இது தலை வலி, தலையில் நீர் கோர்த்தல் போன்ற

பிரச்னைகளை சரிசெய்கிறது.

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, இதன் விளைவாக எடை இழப்பும் ஏற்படுகிறது.

கடுகு எண்ணெயை உணவில் சேர்த்துக் கொண்டால், சருமத்திற்கு பொலிவு அளிக்கிறது.

கடுகு எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள், முகப்பரு அல்லது முகப்பரு தழும்புகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

கடுகு எண்ணெயை உட்கொள்வது வாயு, மலச்சிக்கல், வீக்கம் மற்றும் அஜீரணத்தை போக்க உதவுகிறது

கடுகு எண்ணையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, இது வீக்கத்தைக் குறைக்கவும், மூட்டு வலிகளைக் குறைக்கவும் உதவுகிறது.

கடுகு எண்ணெயில் செலினியம் என்ற ஊட்டச்சத்து நிறைந்துள்ளது, இது எலும்புகள், பற்கள் மற்றும் ஈறுகளை வலுப்படுத்துவதற்கு உதவுகிறது.

பாதங்களில் வெடிப்பு, நகங்களில் வெடிப்பு அல்லது தோல் உரிதல் போன்ற பிரச்னைகளுக்கு உதவுகிறது.

வலி நிவாரணியாக, மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க மசாஜ் செய்யப் பயன்படுகிறது.

செரிமானச் சுரப்பிகளைத் தூண்டி செரிமானத்தை மேம்படுத்துகிறது. கிருமி நாசினியாக பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுகிறது.

கடுகு எண்ணெயின் பக்க விளைவுகள்

கடுகு ஒவ்வாமை இருப்பவர்கள் தோலில் கடுகு எண்ணெயைப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிக அளவு கடுகு எண்ணெய் வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு உண்டாக்குகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தின் படி, கடுகு எண்ணெய் பித்தத்தை அதிகரிக்கும். உடலில் அதிகளவில் பித்தம் இருந்தால் எரிச்சல், காய்ச்சல் மற்றும் அழற்சி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிக அளவு கடுகு எண்ணெயை உட்கொண்டால் இருதய பிரச்னைகள், சுவாச பிரச்சனைகள், வயிற்றுப்போக்கு , ரத்த சோகை போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

கடுகு எண்ணெயில் உள்ள அதிக அளவு எருசிக் அமிலம் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது மற்றும் அதை கணிசமாக சேதப்படுத்துகிறது. அதே சமயம். இதில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் (MUFA) கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. எனவே, அளவோடு  எடுத்துக்கொண்டால் இதய ஆரோக்கியத்துக்கு உதவும்.

அதிக அளவு கடுகு எண்ணெய் சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

கடுகு எண்ணெயை யார் பயன்படுத்தக் கூடாது?

குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய கடுகு எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் கடுகு எண்ணெயை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.  ஏனெனில், அதில் உள்ள ரசாயன கலவைகள் வளரும் கருவுக்கும் தீங்கு விளைவிக்கும்.

தலை முடிக்கு கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய் கொண்டு தலைமுடியில் மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது முடி உதிர்வைக் குறைக்க உதவுகிறது மற்றும் முடியின் தரத்தை மேம்படுத்துகிறது. உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியை வலுவாக்குகிறது.

முடியில் ஏற்படும் வறட்சி, முடி உதிர்தல் மற்றும் பளபளப்பு இல்லாத கூந்தலுக்கு இது ஒரு நல்ல தீர்வை கொடுக்கும். ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி கடுகு எண்ணெயில் புரோட்டீன் மற்றும் ஒமேகா-3 கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை இரண்டும் கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

தொகுப்பு:-தவநிதி