Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மூக்குத்தி அவரையின் நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

மூக்குத்தி அவரை (Clove Beans) சத்துக்கள் நிறைந்த ஒரு பாரம்பரியக் காய்கறி ஆகும். இது உடலுக்குப் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. பார்ப்பதற்கு மல்லிகை மொட்டு போல் உள்ள இது காய்கறி வகையாகும். காம்புக் கத்தரி என அழைக்கப்படும் கொடி வகை காய்கறியாகும்.

மூக்குத்தி அவரையின் மருத்துவ குணங்கள்

ரத்த சர்க்கரை கட்டுப்பாடு: மூக்குத்தி அவரை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க உதவுகிறது.

காய்ச்சல் குணமாக: இதன் காய்களை காய வைத்துப் பொடி செய்து சாப்பிட்டால் காய்ச்சல் கட்டுப்படும் என்று கூறப்படுகின்றது.

செரிமானம் மேம்படும்: இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல்

பிரச்னையைத் தீர்க்க உதவுகிறது.

ஊட்டச்சத்துக்கள்: இதில் புரதம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி: இதில் ஆன்டிஆக்சிடன்ட்கள் நிரம்பியுள்ளதால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. மேலும், வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். இதன் பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் கால்சியம் உள்ளது.

தொகுப்பு - ரிஷி