Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வாழையும் அதன் நன்மைகளும்!

நன்றி குங்குமம் டாக்டர்

தொடர்ந்து வாழை இலையில் சாப்பிட்டு வந்தால் மேனி மினுமினுப்பாக இருக்கும். ஆயுள் அதிகரிக்கும்.

*வாழைப் பூவை உணவில் சேர்ப்பதால் சிறுநீரக நோய் குணமாகும்.

*வாழைக்காயை அடுப்பில் சுட்டெடுத்து, அம்மியில் வைத்து தண்ணீர் விட்டு மை போல் அரைத்தெடுத்து கை-கால்களில் அடிபட்ட இடத்தில் பற்றுப் போட்டால் ரத்தக்கட்டு குணமாகும்.

*வாழைக்காயை வாரம் இருமுறையாவது உணவில் சேர்த்து வந்தால் எளிதில் ஜீரணமாகும். வயிறு பசி எடுக்கும். உடலுக்கு வலு ஏற்படும். ரத்த விருத்தி உண்டாகும்.

*வாழைக்காயை உணவில் சேர்த்து வந்தால் வயிறு உளைதல், வயிற்றுப்புண், உடல் உஷ்ணம், இருமல், சளி, கபம், கபம் கட்டிய இருமல், தலைபாரம், நீர்க்கோர்வை, பித்தம், பித்த சுரம், பித்த வாந்தி, குமட்டல், உமிழ்நீர் அதிகம் சுரத்தல், மனக்குழப்பம், பைத்தியம் ஆகிய நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

*வாழைத்தண்டை மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ‘கல்லடைப்பு’ நோய் குணமாகும்.

*வாழைப்பூவை சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து இடித்துச் சாறெடுத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் தீட்டு குணமாகும்.

*வாழைப்பூவை தனியாகவோ, துவரம் பருப்புடன் ேசர்த்தோ சமையல் செய்து சாப்பிட்டு வர அது ரத்த மூலத்தை குணமாக்குவதுடன் தாது பலத்தையும் தரும்.

*வாழைப்பழத்தில் ஏ.பி.சி ஆகிய உயிர்ச் சத்துக்களும், சுண்ணாம்பு, கந்தகம், இரும்புச்சத்து போன்ற சத்துக்களும் உள்ளன. வாழைப்பழம் சாப்பிடுவது உடல் வளர்ச்சிக்கு நல்லது.

*வாழைப்பழத்திலுள்ள சர்க்கரைச் சத்து குடலில் கிருமிகளை அழிக்கும். மலச்சிக்கலை போக்கும். புரதச்சத்து அதிகம் இல்லாததால் இதை பாலுடன் கலந்து உண்டால் மூளை பலம் பெற்று சுறுசுறுப்புடன் இயங்கும்.

*அம்மை நோய் கண்டவர்களுக்கு மொந்தன் வாழைப்பழம், மலை வாழைப்பழம் தருவது நல்லது.

தொகுப்பு:- இரா.ரெங்கசாமி, தேனி.