Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சருமத்தை மிருதுவாக்கும் பாதாம் எண்ணெய்!

நன்றி குங்குமம் டாக்டர்

பாதாம் எண்ணெயில் நன்மை செய்யும் வைட்டமின்களும், தாது பொருள்களும் நிறைந்திருப்பதால், உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. பாதாம் எண்ணெயில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று இனிப்பு சுவைக் கொண்டது. மற்றொன்று கசப்பு சுவைக் கொண்டது. முதல் வகை சருமம் மற்றும் கூந்தலுக்கு பயன்படுத்தக்கூடியது. இரண்டாம் வகை வாசனை திரவிய தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. பாதாம் எண்ணெயின் பயன்கள் குறித்து பார்ப்போம்:

பாதாம் எண்ணெய் அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது. எனவே, மிருதுவான, பளபளப்பான சருமத்தை பெற விரும்புகிறார்கள். பாதாம் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வர நல்ல பலன்கிடைக்கும். இதில் வைட்டமின் ஈ சத்து மிகுந்திருப்பதால், சருமத்தை ஈரப்பதமாக வைத்து தோலை பளபளப்பாக்குகிறது. டீன்ஏஜ் வயதில் இருந்தே பாதாம் எண்ணெயை பயன்படுத்த தொடங்கினால் முதுமையான தோற்றத்தை தள்ளி வைத்து இளமையைப் பாதுகாக்கும்.

இரவு தூங்க செல்வதற்கு முன்பு சில துளிகள் பாதாம் எண்ணெயை கண் பகுதியை சுற்றி தடவவும். காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் நான்கு வாரங்களுக்குள் தெளிவான பார்வைத்திறனை தரும் ஆற்றல் பாதாம் எண்ணெய்க்கு உண்டு. தூக்கமின்மை மற்றும் சமச்சீரற்ற உணவு முறை இவை இரண்டும்தான் கருவளையத்திற்கு முக்கிய காரணமாகும். கருவளையம் மற்றும் வீக்கத்தை குறைக்க பாதாம் எண்ணெய் சிறந்த தீர்வாக அமையும்.

பாதாம் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான எண்ணெய் தன்மை மற்றும் சரும துளைகளில் சேரும் அழுக்குகளை அகற்றக்கூடியவை. சருமத்தை சுத்தப்படுத்தி, பளிச்சென்று காட்சியளிக்கவும் வைக்கும். முகப்பரு ஏற்படுவதையும் தடுக்கும். பாதாம் எண்ணெயில் ரெட்டினோல் உள்ளது. இது முகப் பருவை குறைக்கும் தன்மை கொண்டது.

உணவில் பாதாம் எண்ணெய் சேர்த்துக் கொண்டால் வாயுக்கோளாறு ஏற்படாது. புற்றுநோய் வரும் வாய்ப்பைக் குறைக்கும். மலச்சிக்கல் வராது. தசைவலியை நீக்கும். பாதாம் எண்ணெயில் வைட்டமின் டி சத்தும் அதிகம் இருப்பதால், குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு வலு சேர்க்கிறது.பாதாம் எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், டென்ஷனைப் போக்கி மன அமைதியைத் தரும்.

தொகுப்பு: தவநிதி