சென்னை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் ஆண்டுக்கு 1256 உயர் மருத்துவ சேவை முகாம்கள் செயல்படுத்த நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜூன் 2025 முதல் மார்ச் 2026 வரை 1,256 உயர் மருத்துவ சேவை முகாம்கள் நடத்தப்படும். ஒரு வட்டாரத்துக்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1164 முகாம்கள் நடத்தப்படும்.