மவ்: உத்தரபிரதேச மாநிலம் மவ் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாஸ் அன்சாரி. இவர் உயிரிழந்த பிரபல தாதா முக்தர் அன்சாரியின் மகன். இவர் கடந்த 2022 உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலின்போது மவ் சதார் தொகுதியில் இருந்து சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். 2022 மார்ச் 3ம் தேதி பஹார்பூர் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, மவ் நிர்வாகத்துக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் அப்பாஸ் அன்சாரிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
வெறுப்பு பேச்சு விவகாரம் உ.பி. எம்எல்ஏவுக்கு 2 ஆண்டு சிறை
0