டெல்லி: இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஐரோப்பிய நாடுகளிடம் அடைக்கலம் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கலவரம் காரணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, விமானம் மூலம் தப்பித்து டெல்லி வந்துள்ளார். டெல்லியில் தங்கியுள்ள ஷேக் ஹசீனா பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் கேட்டு பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.