டெல்லி: வங்கதேசத்தில் வன்முறை வெடித்து நிலைமை மோசமானதால் ஹசீனாவின் விமானம் இந்தியா வர அனுமதித்தோம் என மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். வங்கதேச விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்து வருகிறார். வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களின் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.