கேம்பிரிட்ஜ்: அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் மாணவர்கள் போராட்டங்களை அனுமதிக்கக்கூடாது போன்ற நிபந்தனைகளை அதிபர் டிரம்ப் விதித்தார். இதனை பல்கலைக்கழகம் ஏற்க மறுத்த நிலையில், அதற்கு அரசு வழங்கி வந்த மிகப்பெரிய நிதி உதவியை நிறுத்தி நெருக்கடி அளித்தார். பின்னர் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரத்தையும் சமீபத்தில் அமெரிக்க அரசு ரத்து செய்தது. சர்வதேச மாணவர் சேர்க்கையை 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் நேற்று முன்தினம் அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். அரசிடம் இருந்து பல்வேறு நெருக்கடிகளை ஹார்வர்டு பல்கலைக்கழகம் எதிர்கொண்டுள்ளது.
இந்த கடினமான சூழ்நிலையில் பல்கலைக்கழகம் நேற்று பட்டமளிப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தது. இதில் தொற்றுநோய் குறித்த ஸ்டான்போர்டு நிபுணர் ஆப்ரகாம் வர்கீர், ஆர்வலர் கரீம் அப்துல் -ஜப்பார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.