சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு வருமாறு: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தங்களது கட்சி தங்களுடன் உறுதியாக நிற்பதை போலவே, மக்களும் அதே அளவு உறுதியுடன் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவாக நிற்பார்கள். மக்களுக்கு பணியாற்றுவதில் தாங்கள் கொண்டுள்ள சோர்வறியா அர்ப்பணிப்பை வரும் ஆண்டு மேலும் வலுப்படுத்தட்டும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.