கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான குற்றவாளி சஞ்சய் ராயை தூக்கிலிடுங்கள் என அவரது மாமியார் துர்கா தேவி தெரிவித்துள்ளார். கர்ப்பமாக இருந்த தனது மகளை சஞ்சய் ராய் கொடுமைப்படுத்தினார். திருமணம் முடிந்த 6 மாதம் தனது மகளுடன் நன்றாக வாழ்ந்து வந்த சஞ்சய் ராய் பிறகு கொடுமைப்படுத்தினார். 3 மாதம் கர்ப்பமாக இருந்தபோது சஞ்சய் ராய் கொடுமைப்படுத்தியதால் தனது மகளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. சஞ்சய் ராய் கொடுமைப்படுத்தியதால் தனது மகளின் உடல்நிலை மோசமானதாக துர்கா தேவி கண்ணீர் பேட்டியளித்தார்.