Saturday, February 24, 2024
Home » கைவினைப் பொருட்களில் வருமானம் ஈட்ட சில ஆலோசனைகள்!

கைவினைப் பொருட்களில் வருமானம் ஈட்ட சில ஆலோசனைகள்!

by Porselvi

வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பதற்கான மற்றொரு எளிமையான வழி கைவினைப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதுதான். பேக் செய்யப்பட்ட பொருட்கள், ஆரோக்கியமான தின்பண்டங்கள், வாசனை மெழுகுவர்த்திகள், வால் ஹேங்கிங்கள், டேபிள் மேட்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் போன்றவை இதில் அடங்கும். உங்களுக்கு ஆர்ட் – கிராஃப்ட் அல்லது சமையலில் ஆர்வம் இருந்தால் நீங்கள் உங்களை ஒரு விற்பனையாளராக எட்சி, அமேசான், ஃபிளிப்கார்ட் அல்லது அஜியோ போன்ற செயலிகளில் பதிவு செய்து கொள்ளலாம்.அல்லது சோசியல் மீடியாவில் இருக்கக்கூடிய உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களை தொடர்புகொண்டு, செகண்டரி டெலிவரி சேவை மூலமாக உங்கள் பொருட்களை நேரடியாக அவர்களுக்கு விற்பனை செய்யலாம்.

* இதற்கு ஏதேனும் முதலீடு செய்ய வேண்டுமா? அல்லது தகுதி வரம்புகள் ஏதேனும் உள்ளனவா?- நீங்கள் சமைக்கப் போகிறீர்கள் என்றால் சமையலுக்குத் தேவையான பொருட்கள் அல்லது கைவினைப் பொருட்கள் செய்வதற்குத் தேவையான பொருட்கள் போன்றவற்றை உங்கள் சொந்த பணம் கொண்டு வாங்க வேண்டி இருக்கும்.

* நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம்? – உங்களது வருமானம் என்பது நீங்கள் விற்பனை செய்யும் பொருட்கள், உங்களின் விற்பனைத் திறன் மற்றும் நீங்கள் அணுகக்கூடிய செல்லர் பார்ட்னர் போன்ற காரணிகளைப் பொறுத்து அமையும். மேலும், உங்கள் பொருட்களுக்கு அதிக விலை வைத்தும் நீங்கள் விற்பனை செய்யலாம்.

*முன்புதான் நாம் செய்யும் கைவினைப் பொருட்கள் விற்பனையானால் மட்டும்தான் வருமானம் என்கிற நிலை இருந்தது. ஆனால் இன்று செய்யும் புராடெக்ட்களை யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் வீடியோவாக பதிவேற்றம் செய்வதிலேயே சப்ஸ்கிரைபர்கள், பார்க்கும் நேரம் பொருத்து அதன் மூலமும் கூட வருமானம் கிடைக்கும்.

*உங்கள் நகரங்களில் சுயதொழில் துவங்குவதற்கு என்றே MSME சான்றிதழ்கள், மேலும் அவர்கள் நடத்தும் தொழில்பயிற்சி நாட்கள், இலவச ஒர்க்‌ஷாப்கள் என அனைத்தும் கண்டறிந்து புதிதாக தொழில் துவங்கலாம். அல்லது இருக்கும் தொழிலை சில ஆலோசனைகள் மூலம் இன்னும் நன்றாக செய்யலாம்.

*உங்களால் ஒரு குறிப்பிட்ட தொகை ஒரு தொழிலில் முதலீடு செய்து மீண்டும் அந்தத் தொகையை எடுக்க முடியும் என்கிற நம்பிக்கை இருந்தால் மட்டும் கடன் வாங்கி தொழில் துவங்குங்கள். இல்லையேல் கடன் உங்கள் கழுத்தைப் பிடிக்காத வண்ணம் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

*கூடுமானவரை முதலில் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், அவர்கள் மூலமாக வரும் வாடிக்கையாளர்கள் மூலம் பொருட்களை விற்பனை செய்யுங்கள். அப்போது தான் ஏதேனும் குறைகள், மாற்றங்கள் எனில் முதலில் தெரிந்தவர்கள் மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். செலவு செய்து கொரியர் அனுப்பி பின்னர் அதில் பிரச்னை எனில் நமக்குத்தான் நஷ்டம் அதிகரிக்கும்.

* ஒரே நேரத்தில் அதிக மூலப்பொருட்களை வாங்கி வைத்து வீணாக்காதீர்கள். ஆர்டர் வரும் வேளையில் மூலப் பொருட்கள் வாங்குவது என முடிவு செய்துகொள்ளுங்கள்.

*முடிந்தவரை வெளியிலிருந்து பணியாளர்களை அமர்த்தும் முன் நம் வீட்டில், நம் நண்பர்களில் யாரேனும் நம் தொழிலில் இணைத்துக்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறதா என கவனியுங்கள். ஏனெனில் பணியாளர்கள் அமர்த்தினால் அதற்குரிய சம்பளம், அவர்கள் நேரம் என அனைத்தையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கும்.

*வீடியோக்களை ஒன்று நீங்களே பதிவு செய்து, எடிட் செய்து அப்லோட் செய்வது கடினமாக இருந்தால். வெளியில் ஒரு வீடியோவிற்கு இவ்வளவு என பணம் வாங்கிக் கொண்டு குறைந்த செலவில் ஆன்லைன் வீடியோக்கள் செய்து தரும் மக்களும் ஏராளமாக உள்ளனர். அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

* இந்தத் தொழிலில் என்னால் மாதம் இவ்வளவு தொகை ஈட்ட முடியும் என்னும் தோராயமான திட்டமும், இலக்கும் மிக முக்கியம்.

You may also like

Leave a Comment

3 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi