ஜெருசலேம்,: காசாவில் இஸ்ரேல் ராணுவ வீரர்களை குறி வைத்து ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 7 வீரர்கள் கொல்லப்பட்டனர். தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பதுங்கி இருந்தனர். அவர்கள் மீது ஹமாஸ் படையை சேர்ந்த அல்-கஸ்லாம் படைப்பிரிவினர் நேற்று அதிகாலை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல ராணுவ வீரர்கள் காயமடைந்தனர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கியது முதல் தற்போது வரை 860க்கும் மேற்பட்ட இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 400க்கும் மேற்பட்டோர் காசாவில் நடந்த போரின் போது கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.