இஸ்ரேல்: ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 198 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. 1,600க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாக பாலஸ்தீனிய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்ததாகவும், 908 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.