சென்னை: வரும் செப்.10ம் தேதி நடைபெற உள்ள வட்டார கல்வி அலுவலர் பணிகளுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 2019-20, 2021-22ம் ஆண்டுக்கான வட்டாரக் கல்வி அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அடுத்த மாதம் செப்.10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு 42 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், தேர்வர்கள் தேர்வுக்கு ஒரு வார காலத்துக்கு முன்னதாகவே பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்றும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.