சென்னை: பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2025-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டை சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடம் இருந்து, மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது ஹஜ் விண்ணப்பங்களை பெற தொடங்கியுள்ளது. இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2025-ற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 13.8.2024 முதல் 9.9.2024 முடிய ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) ஐபோன் (அல்லது) ஆண்ட்ராய்டு கைபேசியில் ‘HAJ SUVIDHA’ செயலியினை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை கட்டணம் ஏதுமின்றி சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை விண்ணப்பதாரர்கள் 9.9.2024ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.