நடப்பாண்டு ஹஜ் புனிதப் பயணத்தில் பங்கேற்பதற்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகள் சவூதி அரேபியாவில் குவிந்துள்ளனா். புனிதப் பயணிகள் புதன்கிழமை அராஃபாவை நோக்கி பயணித்தனா். மெக்காவின் தென்கிழக்கில் உள்ள அராஃபா மலை இஸ்லாம் மதத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இது நபிகள் நாயம் தனது இறுதி ஹஜ் உரையை நிகழ்த்திய இடமாகக் கருதப்படுகிறது. புனிதப் பயணிகள் நள்ளிரவு முதல் சூரியன் மறையும் வரை அராஃபாவில் இருப்பாா்கள். வியாழக்கிழமை சூரியன் மறைந்த பிறகு, அவா்கள் முஸ்தலிஃபா பாலைவன சமவெளிக்கு சென்று, புனிதச் சடங்கில் பயன்படுத்தப்படும் கற்களை சேகரிப்பாா்கள்.
ஹஜ் புனிதப் பயணத்தில் 15 லட்சம் வெளிநாட்டினா்!!
0