சென்னை: பாடி புதுநகரில் காளிதாஸ் என்பவரை மணி என்ற ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மணி, காளிதாஸ் இடையே மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி கோபம் அடைந்த ரவுடி மணி பட்டாக் கத்தியால் காளிதாசை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றார். காளிதாஸ் உடலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், ரவுடி மணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ரவுடி மணி ஏற்கனவே 2 காவலர்களை கை, காது உள்ளிட்ட இடங்களில் வெட்டிய வழக்கில் கைதானது குறிப்பிடத்தக்கது.